இந்தியமண்ணில் இந்தியா வெற்றி பெறும்: கும்ப்ளே
டி.ராம் ராஜ்
பெங்களூர்:
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போடியில் இந்தியா வெற்றி பெறும் என இந்திய சுழல் பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த 1998ம் ஆண்டு போட்டியின் போது இந்தியா வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்த அனில் கும்ப்ளே தோள்பட்டை வலி காரணமாகஅறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளதால் தற்போதைய தொடரில் பங்கு பெறவில்லை.
பெங்களூரில் இருந்த கும்ப்ளேயை ஆஸ்திரேலிய தொடர் பற்றி பேட்டி கண்டபொழுது அவர் தெரிவித்த கருத்துகள்:
ஆஸ்திரேலியாவுடனான போட்டி கடினமான ஒன்று. இருந்தாலும் இந்தியாவில் நடைபெறுவதால் சொந்த மண்ணில் விளையாண்ட அனுபவம் மற்றும்உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு காரணமாக இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்.
1998ல் இந்தியாவில் ஆடிய ஆட்டத்தை நினைவில் கொண்டு ஆஸ்திரேலியா இம்முறை சிறப்பாக விளையாட முயற்சிக்கும். இந்தியாவும் சிறப்பானசெயல்பாட்டிற்கு 1998ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக வெற்றி பெற்ற முறையை மனதில் கொண்டு விளையாட வேண்டும்.
98ம் ஆண்டு வராத கிளென் மெக்ராத் இம்முறை வருவது ஆஸ்திரேலியாவிற்கு ஒரு பிளஸ் பாயிண்ட். இருந்தாலும் ஆஸ்திரேலிய பிட்ச் போல் இங்குள்ளபிட்ச்களில் மெக்ராத் பந்து வீச்சு எடுபடாது என்பதால் நம்முடைய வீரர்கள் அவருடைய பந்து வீச்சை எதிர்கொள்வதில் சிரமம் இருக்காது . இதனால்அவருக்கு கிடைக்கக்கூடிய விக்கெட்டுகள் குறைவாக இருக்கும்.
ஆஸ்திரேலிய அணியினர், இந்திய வீரர்கள் பற்றி கூறிய கருத்துகள் புதிதானதல்ல. இது வழக்கமான ஒன்று தான். இந்திய அணியின் ஆஸ்திரேலிய பயணத்தின்போதும் இதுமாதிரி இருந்தது. விருப்பம் போல் அவர்கள் கருத்துகளை வெளியிட இம்முறை இந்திய பத்திரிகைகள் ஒரு களமாக அமைந்துவிட்டது.
இந்திய அணியில் விளையாட முடியாவிட்டாலும் அணியின் பயிற்சியாளர் வேண்டுகோளை ஏற்று சென்னை பயிற்சியாட்டத்தில் அணியில் புதிதாக இடம் பெற்றசுழல் பந்து வீச்சாளர்களுக்கு எனக்கு தெரிந்த அளவிலான நுணுக்கங்களை பற்றி எடுத்துக்கூறி அவர்களின் பந்துவீச்சு முறையை மேம்படுத்த உதவினேன்.
பயிற்சியாளர் ஜான் ரைட்டுடன் இன்னும் முழுதாக இணைந்து பயிற்சியில் ஈடுபடாவிட்டாலும் சென்னை பயிற்சி முகாமிலிருந்து அவருடன் வீரர்கள் நல்ல முறையில்ஒத்துழைக்கின்றனர். வீரர்கள் தங்களுடைய கருத்துகளை கூறவும், தங்கள் கடமையை உணர்ந்து செயலாற்றவும் சென்னை முகாம் வழிவகை செய்திருந்தது.
ஆஸ்திரேலியா அணியினை பொருத்தவரையில் ஸ்கோர் அதிகமாக இருக்கும்போது கொஞ்சம் நெருக்குதலுடனேயே ஆடுவர். அதற்கேற்ற வகையில்சவாலான இலக்குகளை நிர்ணயிக்கும் பொழுது எளிதில் வெற்றி பெறலாம்.
தோள்பட்டை வலிக்கான அறுவைசிகிச்சைக்குபின் குறிப்பிட்ட பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். மேலும் மார்ச் 2வது வாரம்தென்னாப்பிரிக்கா சென்று டாக்டர் மார்க்பெர்குஸனிடம் சிகிச்சை பெறவுள்ளேன். தற்போதைய நிலையில் இந்திய அணிக்கு எப்போது திரும்புவேன்எனதெரிவிக்க இயலாது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications