For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசியலில் ஈடுபடலாமா மாணவர்கள்?

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

இன்றைய மாணவர்கள் அரசியலில் ஈடுபடுவதில் தவறேதும் இல்லை என கோவையில் முன்னாள் மத்தியஅமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

கோவை பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் கலை விழா யூஃபோரியா 2001 கண்காட்சிநடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:

மாணவர்கள் அரசியலில் ஈடுபடுவதில் தவறு எதுவும் இல்லை. ஆனால், இந்த அரசியல் ஈடுபாடு எந்த விதத்திலும்அவர்களது கல்விக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது. படித்து முடித்து கல்லூரியை விட்டு வெளியே வரும் போதுநீங்கள் நிறைய சவால்களையும் போட்டிகளையும் எதிர்நோக்க வேண்டியிருக்கும். உங்களது திறமையைப்பயன்படுத்தி முன்னேற வேண்டும்.

வெளிநாடுகளில் படிப்போருக்கும் இந்தியாவில் படிப்போருக்கும் அதிக வித்தியாசம் ஒன்றுமில்லை. ஆனால்,இந்தியாவில் உருவாகும் மாணவர்கள் கச்சாப் பொருளைப் போன்றவர்கள். வெளிநாட்டில் உள்ள மாணவர்கள்பயன்படுத்த தயாரான பொருளைப் போன்றவர்கள். எனவே வெளிநாட்டுக் கம்பெனிகள் இந்திய மாணவர்களைபெற்று அவர்களுக்குத் தக்க பயிற்சி அளித்துப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இந்தியாவில் வறுமை இன்னும் 26 சதவீதம் உள்ளது. இதில் தமிழகத்தில் 21 சதவீதம் உள்ளது. வறுமையைஒழிப்போம் என்ற சவாலோடு மாணவர்கள் வருங்காலத்தை எதிர்கொள்ள வேண்டும். பொருளாதாரச்சீர்திருத்தங்கள் மூலம் தான் வறுமையை ஒழிக்க முடியும். எனது காலத்திற்குள் வறுமை ஒழிந்து விடும் எனநினைக்கிறேன். அப்படி இல்லையென்றால், உங்கள் காலத்திலாவது வறுமை ஒழியும். ஊழலற்ற, தெளிவானஆட்சியால் ஏழ்மை ஒழியும். அத்தகைய ஆட்சி அமைய நீங்கள் ஆதரவளிப்பீர்கள் என நம்புகிறேன்.

நாட்டுக்காக சிறை சென்ற தலைவர்களின் குடும்பங்களில் கல்லாமை இருந்து வந்துள்ளது. இந்த கல்லாமையைஅகற்ற சரியான பொருளாதாரச் சீர்திருத்தம், மற்றும் அரசியலமைப்பை உருவாக்க நமது தலைவர்கள் தவறிவிட்டனர் என்றார் ப.சிதம்பரம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X