கட்சியை உடைப்பேனா? த.மா.கா. எம்.எல்.ஏ மறுக்கிறார்
சென்னை:
மூப்பனாருக்கு எதிராகவோ அல்லது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவோ செயல்பட மாட்டேன் என தமிழ் மாநிலகாங்கிரஸ் கட்சி எம்.எல். ஏ. அழகிரி கூறியுள்ளார்.
அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வதில் த.மா.காவில் பெரும் குழப்பம் நிலவுகிறது. ஒரு தரப்பினர் திமுகவுடன் உறவுவைக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இவர்களில் முக்கியமானவர் அழகிரி எம்.எல். ஏ. சட்டச பையில் திறம்பட வாதாடுபவர்என்ற பெயர் அழகிரிக்கு உண்டு. சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ இவர்.
ஒரு வேளை அதிமுகவுடன் தமா.கா கூட்டணி வைத்தால் அழகிரி தலைமையில் சில எம்.எல்.ஏக்கள் கட்சியிலிருந்துவிலகுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த செய்தியை அழகிரி மறுத்துள்ளார்.
சென்னையில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டியில், மூப்பனாருக்கு விரோதமாக செயல்பட மாட்டேன். தமிழ் மாநிலகாங்கிரஸ் கட்சியிலிருந்தும் விலக மாட்டேன்.
கூட்டணி குறித்து மூப்பனார் பேசி வருகிறார். அவர் சிறந்த தலைவர். சரியான முடிவை யே அவர் எடுப்பார்.
அதிமுகவுடன் கூட்டணி ஏற்பட்டால் எனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து கட்சி யை உடைப்பேன் என்பது தவறான செய்தி.அப்படியெல்லாம் செய்ய மாட் டேன்.
கூட்டணி குறித்து பேச்சு நடந்து வருகிறது. த.மா.கா. பெரிய கட்சி. குழப்பம் இருக்கத்தான் செய்யும். திமுக கூட்டணியில் மட்டும்எல்லாம் முடிந்துவிடவில்லையே. இன்னும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது போலத்தான் எங்கள்கூட்டணியும்.
சபாநாயகர் பி.டி.ஆர். பழனி வேல்ராஜன் எனது நண்பர். அடிக்கடி இருவரும் சந்தித்துக் கொள்வோம். அவர் என்னைச் சந்தித்ததுதற்செயலான சம்பவம்தான். அப்போது கூட்டணி குறித்தும் பேசினோம். ஆனால் இதற்கு அரசியல் முக்கியத்துவம் கொடுக்கத்தேவையில்லை என்றார் அழகிரி.
-
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications