தமிழகத்தில் ஏன் குழாயடி சண்டை இல்லை தெரியுமா!
தமிழக அரசியலையும் சினிமாவையும் பிரித்துவிட முடியாது. அவை ரத்தத்தின் ரத்தங்கள். பிரியாத உடன்பிறப்புக்கள்.
பல கட்சி கண்ட வில்லன் நடிகர் மன்சூர்அலிகான் இப்போது அ.தி.மு.கவில் இருக்கிறார். தேர்தல் நெருங்கிவிட்டதால் முக்கிய அதிமுக பேச்சாளராகவும்உருவெடுத்திருக்கிறார். சமீபத்தில் குடியாத்தத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. கூட்டத்தில் பேசிய மன்சூரலிகானின் பேச்சு இது,
(கருணாநிதியை நோக்கி கேட்கிறார்) உன் பேரிலே சொத்து இல்லையா.... உன் மகன் பேருலே சொத்து இல்லையா... பேரன், பேத்தி பேருல சொத்துஇல்லையா...மருமகள் பேருல சொத்து இல்லையா....
உலகத்துல இருக்கிற சிமென்ட் கம்பெனிகளை எல்லாம் பீச்லே சுண்டல் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்கீங்களே!. இதுக்கெல்லாம் எங்கிருந்து பணம்வந்துச்சு? என்னமோ, அம்மா எலக்ஷன்லே நிக்க முடியாதுன்னு தி.மு.க.காரன் ஊரெல்லாம் சொல்லிகினு திரியறான்களே....ஏன் நிற்க வேண்டும்?உட்கார்ந்துகினே ஜெயிப்போம்!
இப்பவெல்லாம் குழாயடிச் சண்டையே இல்லைன்னு கருணாநிதி விளம்பரம் தருகிறார். இதுக்கு எட்டு லட்ச ரூபாய் செலவு வேறு... உண்மை தான், குழாய்லேதண்ணி வந்தா தானே குழாயடிச் சண்டை வரும்.
நமக்கு நாமே திட்டம்னு சொல்வாங்களே...அதுல ஊர்ல இருக்குற தி.மு.க.காரன் மூணு பேரு ஆளுக்கு ரெண்டரை லட்சம் போட்டான்னா, கவர்மென்டுஒரு பத்து லட்சம் தரும். மொத்தத்தையும் இந்த மூணு பேரும் சுருட்டிகிட்டு போய்டுவான். இது தான் நமக்குநாமே திட்டம்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!