பா.ஜ.க. தொகுதிப் பறிப்பு ஏன்?
சென்னை:
பாரதீய ஜனதாக் கட்சிக்கு வழங்கப்பட்ட 23 தொகுதிகளில் 2 தொகுதிகளை திடீர் என கேட்டு வாங்கியது ஏன்என்பதற்கு இருவிதமான காரணங்கள் கூறப்படுகின்றன.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாரதீய ஜனதாக் கட்சிக்கு வருகிற சட்டசபைத் தேர்தலில் 23 சீட்டுக்கள்ஒதுக்கப்பட்டன. இந்தக் கட்சிக்குத்தான் முதலில் தொகுதிப் பங்கீடு முடிந்தது. இந்த நிலையில் மதிமுகவுக்கானதொகுதிப் பங்கீடு ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. அப்போது பா.ஜ.கவிடமிருந்து 2 தொகுதிகள் திரும்பப்பெறப் பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க.வுக்கும், மதிமுகவுக்கும் இடையே, கூட்டணியில் நம்பர் 2 யார்என்ற பிரச்சினை எழுந்துள்ளதாக சமீப காலமாக பேசப்பட்டு வந்தது. ஆனால் சம்பந்தப்பட்ட கட்சிகள் அதைமறுத்தாலும், தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையின் போது இந்தப் பிரச்சினை எழுந்ததாக கூறப்பட்டது.
பா.ஜ.க.வை விட குறைவான தொகுதிகள் ஒதுக்கினால் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என மதிமுக தரப்பில்திமுகவிடம் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் மதிமுகவுக்கும் 23 சீட் தருவதில் திமுக தரப்பில்தயக்கம் காட்டப்பட்டுள்ளது. நிறைய கட்சிகள் கூட்டணியில் இருப்பதால் அனைவருக்கும் சீட் தர வேண்டும் என்றுகூறப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் தங்களது கருத்தில் பிடிவாதமாக இருந்துள்ளார்கள்.
இந்த நிலையில், போலி ஆயுத பேர ஊழல் விவகாரம் டெஹல்கா.காம் மூலம் வெடித்தது. இதைப் பயன்படுத்திக்கொண்ட திமுக தலைமை, இதைக் காரணம் காட்டி சில தொகுதிகளை பா.ஜ.க.விடமிருந்து திரும்பப் பெற முடிவுசெய்தது. ஊழல் புகார் காரணமாக பா.ஜ.கவின் வெற்றி வாய்ப்பு தேர்தலில் பாதிக்கப்படலாம் என்பதால்தொகுதிகளைக் குறைத்துக் கொள்ளுமாறு பா.ஜ.க.வுக்கு அறிவுரை கூறப்பட்டதாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து 2 தொகுதிகளை வாங்கி அதை மதிமுகவுக்குக் கொடுத்துள்ளது திமுகஎன்று கூறப்படுகிறது.
-
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications