• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உயிரை நீக்கியது உடல் : சிதம்பரம் வர்ணனை

By Staff
|

சென்னை:

ப.சிதம்பரம் தான் த.மா.காவிலிருந்து நீக்கப்பட்டிருப்பது உடல் உயிரைவிலக்கியதற்கு ஒப்பானது என கூறினார்.

தமிழ் மாநில காங்கிரசிலிருந்து விலகி த.மா.கா.ஜனநாயக பேரவை என்ற கட்சியைதொடங்கிய முன்னாள் மத்திய நிதி அமைச்சர்.அவர் த.மா.காவிலிருந்துநீக்கப்பட்டுள்ளார் இது குறித்து பெருந்திரளாக கூடியிருந்த செய்தியாளர்களுக்குஅளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

உடல் என நான் குறிப்பிட்டது சத்யமூர்த்தி பவனையாகும்(த.மா.கா.தலைமையகம்).உயிர் என்பது இங்கு இருப்பதாகும் (த.மா.கா.ஜ.பேரவை).

அ.தி.மு.க -த.மா.கா. கூட்டணியை என் மனசாட்சி ஏற்கவில்லை. ஏனென்றால்அ.தி.மு.கவால் நல்ல ஆட்சியை தர முடியாது.

நான் த.மா.கா.ஜனநாயக பேரவையை 60 நாட்கள் வரைதான் நடத்ததிட்டமிட்டிருந்தேன். ஆனால் பல அரசியல் கட்சியை சார்ந்தவர்களிடமிருந்தும்.அரசியல் சம்பந்தப்படாதவர்களிடமிருந்தும் கிடைக்கும் ஆதரவு பேரவையை நீண்டகாலம் நடத்தலாமா என சிந்திக்க வைத்திருக்கிறது.

மாநிலத்தின் பல பகுதிகளிம் எங்கள் பேரவையை பதிவு செய்து விரிவுபடுத்தஎண்ணியிருக்கிறேன்.

த.மா.கா. ஒழுங்கு நடவடிக்கை குழுவினரிடமிருந்து விளக்கம் கேட்டு எனக்கு எந்தவிதமான நோட்டீசும் வரவில்லை. நோட்டீஸ் அனுப்ப அவர்கள் முடிவுசெய்திருப்பதாக தெரியவந்துள்ளது. நோட்டீஸ் கிடைத்த பின்பு தான் எந்த விதமானநடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவெடுப்பேன்.

நான் துவங்கியது எதிர்ப்பு இயக்கம் என்றாலும், என்னை ஜெயப்பிரகாஷ்நாராயணனுடன் ஒப்பிடக் கூடாது. அவரோடு ஒப்பிடப்படும் போது நான் மிகச்சிறியவன்.

கடந்த 3 இடைத் தேர்தல்களிலும் அ.தி.மு.கவை, த.மா.கா ஆதரித்து தான் மிகப் பெரியதவறு.

வாஜ்பாய் நம்பிக்கை வாக்கு கோரிய போது த.மா.கா. ஓட்டெடுப்பில்பங்கேற்கக்கூடாது என கூறியது நான்தான். அதே போல் தேர்தலின் போது பா.ஜ.க.எதிராகவும் பிரச்சாரம் செய்தது நான் தான்.

என் கட்சி தொண்டர்கள் தேவைப்பட்டால் தேர்தலில் போட்டியிடுவார்கள். தேர்தலில்போட்டியிடுவது மட்டும் பேரவையின் முக்கிய நோக்கமல்ல.

நான் உச்ச நீகிமன்ற வழக்கறிஞர் என்றாலும், அதிகமான நேரத்தை பேரவையில்அலுவலகத்தில்தான் கழிப்பேன் என கூறினார்.

சிதம்பரத்தின் இந்த கூற்று த.மா.கா தலைவர்கள் பலரும் அவர் நீதிமன்றத்தில்பெரும்பாலான நேரம் இருப்பதால்தான் அவர் கட்சி கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை என்பதற்கு நேர்மாறாக இருக்கிறது.

திமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சித்து வருவதாலோ என்னவோ கருணாநிதிமாதிரியே வர்ணணை எல்லாம் சொல்லி தூள் கிளப்ப ஆரம்பித்துவிட்டார் ப.சி.

யு.என்.ஐ.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X