For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லண்டன் ஹோட்டல்கள்: ஜெ. மீது 2-வது குற்றப்பத்திரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வருமானத்துக்கு மீறிய சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது இன்னொரு குற்றப் பத்திரிக்கைதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஊழல்தடுப்புத்துறை இந்தக் குற்றப் பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.ஏற்கனவே ஜெயலலிதா மீது இதே துறை குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது.

முதல் குற்றப் பத்திரிக்கையில் ஜெயலலிதா ரூ. 66.65 கோடிக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து வைத்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதில் அவரது தோழி சசிகலா, முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், சசியின் உறவுப் பெண் இளரவசிஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது குற்றப் பத்திரிக்கையில் பல திடுக்கிடும் தகவல்களும்தெரிவிக்கப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

லண்டனில் உள்ள குற்றவியல் தடுப்புப் பிரிவின் உதவியுடன் ஜெயலலிதாவின் வெளிநாட்டு மோசடிகள் குறித்து விசாரணைநடத்தப்பட்டது. அதில் பல புதிய விவரங்கள் தெரிய வந்துள்ளன. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரும், சசிகலாவின்அக்காள் மகனுமான டி.டி.வி. தினகரனும் சேர்ந்து துபாய், இலங்கை. மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பல கோடிரூபாய்களை முதலீடு செய்துள்ளனர்.

மத்திய அரசுக்குத் தெரியாமல் இந்தப் பணம் நாட்டை விட்டு வெளியேறியுள்ளது. இது பெரா (அன்னியச் செலாவணி) சட்டப்படிகடும் குற்றமாகும்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தான் தினகரன் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் மூன்று நிறுவனங்களை வாங்கியுள்ளார்.டிப்பர் இன்வஸ்ட்மென்ட்ஸ், பன்யான் ட்ரீ என்டர்பிரைசஸ், துருக்கி இன்டஸ்ட்ரீஸ் ஆகிய மூன்று நிறுவனங்களிலும் பல கோடிகள்முதலீடு செய்யப்பட்டு அவை தினகரனால் வாங்கப்பட்டுள்ளன.

லண்டனில் பெர்க்லேஸ் வங்கியின் மூலமாக இந்தப் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது என மாநில ஊழல் தடுப்புப் பிரிவு தனதுகுற்றப் பத்திரிக்கையில் கூறியுள்ளது. தேர்தல் நேரத்தில் இந்த குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பது மிகவும்குறிப்பிடத்தக்கது.

குற்றப் பத்திரிக்கையில் கூறப்பட்டிருக்கும் பிற விவரங்கள்:

1994ம் ஆண்டில் லண்டனில் உள்ள மீர் கேர் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் நாயேஷ் தேசாய், நாட்வெஸ்ட் வங்கியில் கணககுவைத்திருக்கும் தேசாய் ஆகியோரின் கணக்குகளுக்கு பணத்தை அனுப்பினார்.

இது தவிர இன்னும் கண்டுபிடிக்கப்படாத ஒரு கணக்கிலிருந்து 13,27,259 பிரிட்டிஷ் பவுண்டுகளும் இந்த வங்கிக் கணக்குகளில்முதலீடு செய்யப்பட்டன. மொத்தம் 39.56 கோடி ரூபாய் இந்தக் கணக்குகளுக்கு தினகரனிடமிருந்து கை மாறியது.

இந்தப் பணத்தைக் கொண்டு லண்டனில் ஸ்டீபிள் ஆஸ்டனில் உள்ள ஹாப்ஸ் கிராப்ட் ஹோட்டலும், சேலே ஹெக்ஸ்காம்பகுதியில் உள்ள சேலே ஹால் எஸ்டேட் ஹோட்டலும் வாங்கப்பட்டன. இத ஹோட்டல்களை பினாமி பெயரில் வாங்கவதற்காககாட்பிரே ரிசெளசர்ஸ் காப்போரெசன் மற்றும் அடல்பி எண்டர்பிரைசஸ் ஆகிய போலி நிறுவனங்களை தினகரன் லண்டனில்துவக்கினார். இந்த நிறுவனஙகள மூலம் தான் ஹோட்டல்களும் வாங்கப்பட்டுள்ளன.

பின்னர் இந்த இரு ஹோட்டல்களையும் நல்ல விலை வைத்து சுமார் 121.53 கோடி ரூபாய்க்கு தினகரன் விற்றுள்ளார். இது தவிரஇந்த ஹோட்டல்களை வாங்க விற்க, விலை பேச என பல முறை தினகரன் வெளிநாடுகளுக்கு பறந்து சென்றுள்ளார். இதற்கும்பெரும் செலவாகியுள்ளது. ஜெயலலிதா சார்பில் தான் அவர் இந்த ஹோட்டல்களை வாங்கியுள்ளார். இது தவிர அவரும் தனியார்ரூ.4.41 கோடியை லண்டனில் முதலீடு செய்துள்ளார்ர்.

தரகர்களுக்கு கமிஷன், பதிவுக் கட்டணம் எல்லாம் சேர்த்து ஹோட்டல்களை வாங்க மட்டும் சுமார் ரூ. 43.98 கோடி ரூபாய்மொத்தமாக செலவிடபபட்டுள்ளது. இந்தப் பணம் ஜெயலலிதாவுக்கு எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை.வருமானத்துக்கு மீறி அவர் இத்தனை முதலீடுகளை செய்துள்ளார்.

இதனால் அவர் தனது அதிகாரததை முறைகேடாக பயன்படுத்தியுள்ளார் என குற்றப் பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை ஏப்ரல் 17ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X