புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்...சந்திரிகா
கொழும்பு:
இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு காண விரைவில் புலிகளுடன் பேச்சுவார்த்தை துவக்கப்படும் என இலங்கை அதிபர் தெரிவித்து உள்ளார்.
தனது இரண்டு நாள் அரசு முறை பயணத்தின் போது பிரான்ஸ் அதிபர் ஜாக்ஸ் சிராக் மற்றும் பிரான்ஸ் பிரதமர் லயோனல் ஜோஸபின் ஆகியோரை சந்தித்துபேசினார் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா.
இலங்கை இனப்பிரச்சனைக்கு நீண்ட கால தீர்வு காண இலங்கை அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு நார்வே தூதுக்குழுவும் உதவி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக விரைவில் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பிரான்ஸ் அதிபர் மற்றும் பிரான்ஸ் பிரதமரை சந்தித்த போது சந்திரிகாகூறியுள்ளார்.
இச்சந்திப்பின் போது, சர்வதேச தீவிரவாதத்தை எதிர்க்கும் ஐரோப்பிய யூனியன் அமைப்பின் தீர்மானங்களை நிறைவேற்ற பிரான்ஸ் தேவையானநடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றார் சந்திரிகா.
இதனை பிரான்ஸ் அதிபரும் ஏற்றுக் கொண்டார். சந்திரிகாவின் இந்த கோரிக்கைக்கு காரணம் இல்லாமல் இல்லை. பாரீஸில் இருந்து தான் புலிகள்அமைப்பு தங்களது வானொலி ஒளிபரப்பை(புலிகளின் குரல்) மேற்கொண்டு வருகின்றனர்.
சர்வதேச தீவிரவாதத்தை ஒழிக்க பிரான்ஸ் சட்டம் இயற்றினால், புலிகள் அமைப்பு தீவிரவாத இயக்கமாக அறிவிக்கப்படும்.
அதன் பின்னர் அந்த அமைப்பினர் அங்கு செயல்பட முடியாது. முடிவில் தங்கள் வானொலி ஒளிபரப்பை பிரான்ஸில் இருந்து மாற்ற வேண்டி வரும்.
பிரிட்டன் நிறைவேற்றிய தீவிரவாத தடை சட்டத்தினால் பாதிக்கப்பட்ட புலிகள் அமைப்பு தங்கள் தலைமையகத்தை இலங்கைக்கு மாற்றிக் கொண்டதுகுறிப்பிடத்தக்கது.
இவ்வாறு சர்வதேச அளவில் நெருக்குதல் கொடுப்பதன் மூலம் புலிகளை பேச்சுவார்த்தைக்கு இணங்க வைக்க முடியும் என சந்திரிகா கருதுகிறார்.
யு.என்.ஐ.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications