மதிமுக வேட்பாளர் விண்ணப்ப விற்பனை துவங்கியது
சென்னை:
மதிமுக சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பிப்பதற்கான வேட்பு மனு விண்ணப்பவிற்பனை ஞாயிற்றுக்கிழமை துவங்கியது.
திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த மதிமுகவை, திமுக தலைவர் கருணாநிதி அதிரடியாக நீக்கி விட்டார்.இதையடுத்து பா.ஜ.க. தொகுதிகள் தவிர பிற தொகுதிகளில் தனித்துப் போட்டியிட மதிமுக முடிவு செய்துள்ளது.
சனிக்கிழமை நடந்த கட்சியின் உயர் மட்டக் கூட்டத்தில், தனித்துப் போட்டியிடுவதெனவும், தேர்தலில் போட்டியிடவிரும்புவோர் ஞாயிற்றுக்கிழமை முதல் விண்ணப்பங்களை அனுப்பலாம் என்றும் வைகோ அறிவித்தார்.
இதன்படி ஞாயிற்றுக்கிழமை முதல் மதிமுக வேட்பாளர் விண்ணப்ப பாரங்கள் விற்பனைக்கு வந்தன.சென்னையிலுள்ள தலைமை அலுவலகமான தாயகத்தில் ஏராளமான தொண்டர்கள் விண்ணப்பங்களை வாங்ககுவிந்திருந்தனர். இதேபோல, மாவட்ட மதிமுக அலுவலகங்களிலும் விண்ணப்ப விற்பனை நடந்ததாக மதிமுகதரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வரும் 6-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் அனைத்தும் தாயகத்திற்கு வந்து சேரும். பின்னர் 8,9 ஆகிய தேதிகளில்மாவட்ட தலைநகரங்களில் நேர்காணல் நடக்கும். 10-ம் தேதி இதுதொடர்பான அறிக்கையை அந்தக் குழுதலைமையகத்தில் சமர்ப்பிக்கும். அதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் வேட்பாளர்களை, கோவையில்,14-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று நடக்கும் மதிமுக மாநாட்டில் வைகோ அறிவிப்பார்.
இதற்கிடையே, கருணாநிதியை தரக்குறைவாக திட்டி போஸ்டர்கள் ஒட்ட வேண்டாம் என்று மதிமுகதொண்டர்களை வைகோ கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், எந்தக்காரணம் கொண்டும் கலைஞரை அவதூறாகத் திட்டியோ, தரக்குறைவாக விமர்சித்தோ போஸ்டர்கள் ஒட்டக்கூடாது.
கொடும்பாவி எரிப்பது போன்ற அநாகரிகமான செயல்களையும் மதிமுக தொண்டர்கள் போர்வையில் சிலவிஷமிகள் செய்கின்றனர். இதுபோன்ற சம்பவங்களிலிருந்து மதிமுக தொண்டர்கள் உஷாராக இருக்க வேண்டும்என்று கூறியுள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications