புரட்சிக்கு வித்திட்டு விட்டது மதிமுக: வைகோ பிரசாரம்
சென்னை:
மவுனப் புரட்சிக்கு வித்திட்டு விட்டது மறுமலர்ச்சித் தி.மு.க. என்று கூறி தனது தேர்தல் பிரசாரத்தைத் துவக்கினார்அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ.
சென்னையை அடுத்த தாம்பரத்தில் நடந்த ம.தி.மு.க .தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், ம.தி.மு.க. வேட்பாளர்கள்க.சோ (தாம்பரம்), சுப்ரமணி (சைதாப்பேட்டை), லவக்குமார் (ஆலந்தூர்) ஆகியோரை அறிமுகப்படுத்தியும்,ஆதரித்தும் வைகோ பிரசாரம் செய்தார்.
கூட்டத்தில் வைகோ பேசியதாவது:
ஈரோடு மற்றும் கரூர் பகுதிகளில் நடந்த ம.தி.மு.க கூட்டங்களுக்கு கடல் போல மக்கள் திரண்டார்கள். இதைப்பார்க்கும் போது மிகப் பெரிய மவுனப் புரட்சிக்கு ம.தி.மு.க வித்திட்டு உள்ளது என்றே நினைக்கிறேன்.
ஒரு புறம் ஊழல் கூட்டணியும், மறுபுறம் ஜாதிக் கூட்டணியும் தேர்தலில் களம் கண்டுள்ளன. இதனால் நடுநிலைப்போக்கு கொண்ட தமிழக வாக்காளர்கள் எங்களுக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளனர். செல்லும்இடங்களிலெல்லாம் சேரும் கூட்டம் இதையே கட்டியம் கூறுகிறது.
என்னை கொலைப் பழி சுமத்தி கட்சியை விட்டு தூக்கி எறிந்தபோது, மனம் உடைந்து தீக்குளித்து உயிர்த் தியாகம்செய்த தண்டபாணி என்ற வீர மறவனின் தாயார், காலைத் தொட்டு வணங்கி விட்டு எனது தேர்தல் பிரசாரத்தைகோவையில், துவக்கினேன்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அடி வயிறு வலிக்க 52 நாட்கள் தி.மு.க. கூட்டணிக்காக பிரசாரம் செய்தேன்.ஆனால் கலைஞரோ இப்போது நம்ப வைத்துக் கழுத்தறுத்துள்ளார்.
ம.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நல்லாட்சி அமைப்போம். கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சிறந்தஆட்சியைத் தருவோம் என்றார் வைகோ.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!