For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

த.மா.கா. தடம் புரண்டு விட்டது என்கிறார் ப.சிதம்பரம்

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

நெருப்பில் பிறந்த கட்சி, தன்மானம், தனித்தன்மை கொண்ட கட்சி, நல்லாட்சி என்றெல்லாம் கூறி வந்த தமிழ்மாநில காங்கிரஸ் தடம் புரண்டது ஏனோ தெரியவில்லை. ஜெயலலிதாவை முதல்வராக ஆக்கியே தீருவேன் எனவைராக்கியமாக உள்ளனர் தமாகாவினர் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சந்தேகம்எழுப்பியுள்ளார்.

சேலம் மாவட்டம், ஓமலூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் திமுக கூட்டணியை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ்ஜனநாயகப் பேரவையின் நிறுவனரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் பொதுக் கூட்டத்தில்பேசியதாவது:

தமிழகத் தேர்தலில் இரண்டு அணிகள் பொதுமக்களின் கதவுகளைத் தட்டுகிறது. அதில் யாருக்குக் கதவை திறக்கவேண்டும் என பொதுமக்கள் தான் வரும் மே 10 ம் தேதி முடிவு செய்வர். ஒரு முறை தவறு செய்தால் அதனைமன்னித்து அடுத்த தேர்தலில் மக்கள் வாக்களிக்கும் மரபு உண்டு.

இது ஜனநாயகத்தின் நடைமுறையாக இருந்து வருகிறது. ஆனால், ஜெயலலிதா தான் தவறே செய்யவில்லை.நீதிமன்றத்தில் பொய் வழக்குப் போட்டுள்ளனர் எனப் பேசி வருகிறார். செய்த தவறை ஒப்புக் கொள்ள மறுத்துவரும் ஜெயலலிதாவிற்கு மக்கள் இந்த முறை வாக்களிக்க மாட்டார்கள்.

ஊழல், ஆணவம், ஆடம்பரம், பகட்டு, சர்வாதிகாரம், சட்டமரபு மீறல், எதிர்க்கட்சியினரை தூக்கி எறிதல்போன்றவை தான் அதிமுக ஆட்சியின் அங்கங்கள். எனது நண்பர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்தை அவர்கள்தூக்கித் தூக்கி எறிந்ததில், அவருக்கு கையே போய் விட்டது. அவரது சூட்கேசை எடுத்துச் செல்ல இப்போது கூடஒரு ஆள் தேவைப்படுகிறது.

சச்சின் டெண்டுல்கர் தான் சதமடித்தார் எனச் சொல்லக் கூடாது. ஜெயலலிதாவும் கூட சதமடித்துள்ளார். அவரதுஆட்சி காலத்தில் அவர் பத்திரிக்கையாளர்கள் மீது 102 வழக்குகளை தொடர்ந்துள்ளார்.

ஜெயலலிதா தண்டனை பெற்ற பிறகும் தவறு செய்யவில்லை எனப் பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் மீண்டும்வாக்களர்களிடம் அருள்பாலிக்கக் கூறுகிறார். இதைவிட அவமானம், தலைகுனிவு வேறுஎதுவும் இல்லை.

நெருப்பில் பிறந்த கட்சி, தன்மானம், தனித்தன்மை கொண்ட கட்சி, நல்லாட்சி என்றெல்லாம் கூறி வந்த தமிழ்மாநில காங்கிரஸ் தடம் புரண்டது ஏனோ தெரியவில்லை, ஜெயலலிதாவை முதல்வராக ஆக்கியே தீருவேன் எனவைராக்கியமாக உள்ளனர்.

திமுக ஆட்சியில் பெரும் தொழிற்சாலைகள் உருவாகியுள்ளன. இதனை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.சென்னையில் டைடல் பார்க் முதல் கயத்தாறில் மின் நிலையம், குளச்சல் துறைமுகம் வரை அனைத்துஇடங்களிலும் தொழிற்சாலைகள் தடம் பதித்துள்ளன என்றார் சிதம்பரம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X