காதலர் தினத்தை தடை செய்ய இந்து முன்னணி கோரிக்கை
கோவை:
இந்திய காலச்சாரத்திற்கு ஒத்து வராத காதலர் தினத்தை தடை செய்ய வேண்டும் என இந்துமுன்னணியின் மாநிலப்பொதுச் செயலர் ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இந்து முன்னணியின் மாநிலப் பொதுச் செயலர் ஜெயராஜ் , கோவையில் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியுள்ளதாவது:
திமுகவை ஸ்டாலின் சங்கராமடத்துடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது என்றாலும், அவரதுஅறியாமையை இது வெளிப்படுத்துகிறது. திமுக முன்பு இருந்ததை விட தற்போது இந்து விரோதப் போக்கைகுறைத்துக் கொண்டு விட்டது.
மத்தியில் வாஜ்பாய் அரசு நீடிக்க நிபந்தனையற்ற ஆதரவு தர திமுக ஒப்புக் கொண்டுள்ளது. அதோடுகணபதிபாளையத்தில் மாட்டு இறைச்சித் தொழிற்சாலைக்கு அனுமதி தராமல் நிறுத்தி வைத்துள்ளது.பூசாரிகளுக்குத் தனி வாரியம் அமைத்துள்ளது.
தேவாரம், திருவாசகம் படிக்கும் கற்பிக்கும் ஓதுவார்களுக்கு பயிற்சி மையத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவேஇதனை கருத்தில் கொண்டு திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து வருகிறோம். திமுகவை ஆதரித்தாலும் நாங்கள்மதிமுகவை ஆதரிக்கவில்லை.
கோவை மத்திய சிறையில் சிலருக்கு சீருடை அணிவதை தவிர்த்துள்ளனர். சிறையில் சிறுபான்மையினர்பெரும்பான்மையினர் எனப் பிரித்து வைத்திருப்பதால் உள்ளே சச்சரவுகள் ஏற்பட்டு வருகிறது. இந்தியகாலச்சாரத்திற்கு ஒத்து வராத காதலர் தினம் கொண்டாடுவதை இந்து முன்னணி எதிர்க்கிறது என்றார் ஜெயராஜ்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!