ஜாமீன் கேட்டு ஜான் பாண்டியன் மனு
சென்னை:
வன்முறை வழக்கில் கைதாகியுள்ள தமிழக முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் ஜாமீன் கோரி மனுதாக்கல்செய்துள்ளார்.
சென்ற வியாழக்கிழமை நடந்த தமிழக சட்டசபை தேர்தலின்போது தி.மு.க.வினரை தாக்கியதாக வழக்கு பதிவுசெய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள ஜான் பாண்டியன் தன்னை ஜாமீனில் விடுவிக்குமாறு கோரி சென்னைசெஷன்சு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தேர்தல் தினத்தன்று ஜான்பாண்டியனும், அவரது ஆதரவாளர்களும் தி.மு.க தேர்தல் அலுவலகத்தை தாக்கியதாகபுகார் கூறப்பட்டது. வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும், 3 பேரை தாக்கியதாகவும் எழும்பூர் தி.மு.க.செயலாளர் போலீசில் புகார் செய்திருந்தார்.
இந்த சம்பவத்தின் போது பரிதி இளம்வழுதியை தாக்குவதற்கும் முயற்சி நடந்ததாக புகாரில் கூறப்பட்டிருந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் வன்முறை நடந்த இடத்திற்கு வந்த போலீசார் வன்முறையாளர்களிடமிருந்துஅரிவாள், நாட்டு வெடிகுண்டு போன்றவற்றை கைப்பற்றினர்.
இதையடுத்து ஜான்பாண்டியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 49 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதுசட்டவிரோதமாக கூடியதாகவும், தாக்குதல் நடத்தியதாகவும், பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் வழக்குபதிவு செயப்பட்டது.
இந்த வழக்கிலிருந்து தங்களுக்கு ஜாமீன் வழங்கப்பட வேண்டும் என ஜான் பாண்டியன் சென்னை செஷன்சுநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் மனுவின் விவரம்:
போலீசார் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு எங்கள் மீது வேண்டுமெனவே வழக்கு தொடர்ந்துள்ளனர்.அவர்கள் தான் எங்களை தாக்கினர். நாங்கள் அது பற்றி புகார் கொடுத்தோம். அதை போலீசார் பதிவுசெய்யவில்லை.
ஆளும் கட்சியினர் எங்களை தாக்கிவிட்டு தப்பி விட்டனர். உண்மையாக தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிவிட்டனர். எனவே, சிறையிலிருக்கும் எங்களை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும்.
எந்த நிபந்தனையையும் ஏற்க தயாராக இருக்கிறோம். விசாரணைக்கு ஒத்துழைக்கவும் தயாராக இருக்கிறோம் எனமனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு புதன்கிழமை விசாரணைக்கு வருகிறது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!