பரிதி இளம்வழுதியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை:
சட்டசபைத் தேர்தலின்போது எழும்பூர் தொகுதி அதிமுக ஆதரவு வேட்பாளர் ஜான் பாண்டியன் மற்றும் அவரதுஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கில், எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதிதாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை சென்னை கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.
மே 10-ம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. அப்போது எழும்பூர் பகுதியில் திமுகவேட்பாளர் பரிதி இளம்வழுதியின் தேர்தல் அலுவலகம் மீது திடீரென கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது.தாக்குதலுக்கு தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவரும், எழும்பூரில் அதிமுக ஆதரவு வேட்பாளராகபோட்டியிட்டவருமான ஜான் பாண்டியன் தலைமை தாங்கியதாக புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பாக ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்டார். அவர் மீது பரிதி இளம்வழுதியின் சார்பில் போலீஸில்புகார் செய்யப்பட்டது.
அதே போல, பரிதி இளம்வழுதியின் ஆட்கள், தன்மீதும் தனது ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக ஜான்பாண்டியன் சார்பில் போலீஸில் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து பரிதி இளம்வழுதியின் ஆதரவாளர்கள் சிலரை போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில் பரிதிஉள்ளிட்ட 10 பேர் தாங்கள் கைது செய்யப்பட்டால், ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்றுகோரி சென்னை முதலாவது செசன்ஸ் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிஅசோக்குமார் புதன்கிழமை இந்த மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து பரிதி இளம்வழுதி கைது செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது. ஆட்சி மாறியுள்ள நிலையில், பரிதிகைது செய்யப்பட்டால், எழும்பூர் பகுதியில், திமுகவினர் வன்றையில் ஈடுபடலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால்,அப்பகுதியில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications