காஷ்மீரில் சண்டை நிறுத்தம் நீட்டிக்கப்படுமா?
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வரும் மே மாதம் 31 ம் தேதியுடன் முடிவடையும் சண்டை நிறுத்தம் மீண்டும்நீட்டிக்கப்படலாம் என்று தெரிகிறது.
மத்திய உள்துறை இணை அமைச்சர் சுவாமி இதுகுறித்து நிருபர்களிடம் கூறுகையில், காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வுகாணும் வகையில், மத்திய அரசு காஷ்மீரில் உள்ள தீவிரவாத இயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காககே.சி.பந்த் என்பவரை நியமித்துள்ளது.
பந்த் பேச்சுவார்த்தை நடத்தியதில் சில தீவிரவாத இயக்கங்கள் காஷ்மீர் பிரச்சனை தீரும் வகையில் தீவிரவாதஇயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தன.
இதனால்தான் காஷ்மீரில் அமைதி ஏற்படுத்தும் விதத்தில் அறிவிக்கப்பட்ட சண்டை நிறுத்தம் தொடர்ந்து அமலில்இருந்து வருகிறது. சண்டை நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றார்.
பிரஹ்மா செலானி என்ற ஆராய்ச்சி பேராசிரியர் கூறுகையில், மத்திய அரசு காஷ்மீரில் சண்டை நிறுத்தத்தைநீட்டிக்க வேண்டும் என்று ஏன் நினைத்தது என்று தெரியவில்லை. ஏனெனில் சண்டை நிறுத்தம் மிகப்பெரியஅளவில் தோல்வியைக் கண்டுள்ளது.
சண்டை நிறுத்தம் அமலில் உள்ள இந்த நேரத்தில் காஷ்மீரில் பல வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த 5மாதங்களாக சண்டை நிறுத்தம் அமலில் உள்ள இந்த நேரத்தில் 432 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால்அதே நேரம் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்படுவதற்கு 5 மாதங்களுக்கு முன்பு வரை 847 தீவிரவாதிகள்கொல்லப்பட்டுள்ளனர்.
சண்டை நிறுத்தம் அமலில் உள்ள இந்த 5 மாதங்களில் 228 பாதுகாவலர்கள் தீவிரவாதிகளால்கொல்லப்பட்டுள்ளனர். அதற்கு முந்தைய 5 மாதங்களில் 185 பாதுகாவலர்கள் தீவிரவாதிகளால்கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நேரத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. சண்டை நிறுத்தம் அமலில் உள்ளகடந்த 5 மாதங்களில் 418 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதற்கு 5 மாதங்களுக்கு முன்பு வரை381 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
சண்டை நிறுத்தம் அமலில் உள்ள இந்த நேரத்தில் கே.சி.பந்த்தின் உதவியுடன் அமைதிப் பேச்சுவார்த்தையைஆரம்பிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது மத்திய அரசு.
மேலும் சண்டை நிறுத்தத்தை நீட்டிக்கவே மத்திய அரசு விரும்புகிறது. மக்கள் ஜனநாயக முன்னணி கட்சியின்தலைவர் சபீர் ஷா கூறுகையில், நாங்கள் அமைதிப் பேச்சு வார்த்தையைத் தொடங்க ஒத்துழைப்பு கொடுத்தால்கண்டிப்பாக சண்டை நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டி வரும் என்றார்.
தற்போது ஸ்ரீநகர் சென்றுள்ள இரண்டு அமைச்சர்கள் டெல்லி திரும்பிய பின் நடக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில்சண்டை நிறுத்தத்தை நீட்டிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
யு.என்.ஐ.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications