ஜெயலலிதாவுக்கு இல.கணேசன் புகழாரம்
சென்னை:
ஜெயலலிதாவிடம் காணப்படும் மாற்றம் தொண்டர்களிடமும் காணப்பட வேண்டும் என தமிழக பா.ஜ.க.செயலாளர்இல. கணேசன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது மகிழ்ச்சியளிக்கிறது. வெற்றி பெற்றவர்கள் வெற்றியைகொண்டாடுவது இயற்கையானதுதான். அது அளவு கடந்துவிடக் கூடாது. வன்முறையில் ஈடுபடுவது, மற்றகட்சியினரைத் தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.
தோல்வியடைந்தவர்களும் தோல்வியை எண்ணி செய்யும் செயல்களும் பாராட்டதக்கதல்ல. அரசியல் கட்சியினர்தாக்கப்பட்டதாக வரும் செய்திகள் வருத்தமளிக்கிறது.
நீதிமன்ற தீர்ப்பு பற்றி மக்கள் மன்றம் கவலைப்படவில்லை என்பது மேலும் விரிவடையுமானால் அது சட்டம்ஒழுங்கை பாதித்து அராஜகத்துக்கு வழி செய்து விடும்.
ஜெயலலிதா தனது பயணத்தின் போது போக்குவரத்து தடைபடாது என கூறியிருப்பதும், மத்திய-மாநிலஅரசுகளிடையே மோதல் இருக்காது என கூறியிருப்பதும் நல்ல அறிகுறி.
தலைமையில் தெரிகின்ற இந்த மாற்றம் தொண்டர்களிடமும் பிரதிபலிக்க வேண்டும். இல்லையென்றால் பழையநிலையே தொடர்வதாக மக்கள் நினைப்பார்கள்.
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து என்ற குறளை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன் என கூறியுள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications