For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வறுமையிலும் உறுதி.... மைசூரில் சிறுமி சாதனை

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

பிச்சைபுகினும் கற்கை நன்றே என்ற ஆன்றோர் வாக்கை பின்பற்றி சாதனை படைத்துள்ளார் மைசூரில் பிச்சைஎடுத்து வாழும் நாகரத்னா என்ன பெண்.

நாகரத்னா என்ற பெண் 10வது படித்து தேர்ச்சி பெற்றுள்ளார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் இவர்பிச்சையெடுத்து அதில் வரும் வருமானத்தின் மூலம் தன் படிப்பு செலவுகளை கவனித்துக் கொண்டார் என்பதுதான்.

தான் தினந்தோறும் பிச்சை எடுப்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு அவர் புத்தகங்கள் வாங்குவது,பள்ளிக்கு படிப்புக்கு பணம் கட்டி வந்துள்ளார்.

இவர் செயின்ட் ஆன்டனி பள்ளியில் படித்து வந்தார். தினமும் பள்ளியிலிருந்து திரும்பியதும் அருகிலுள்ளவீடுகளுக்குச் சென்று பிச்சை எடுத்து வந்தார். இதில் வரும் பணத்தைக் கொண்டு புத்தகம், பள்ளிக்கு கட்டவேண்டிய பணம் தவிர தனது மதிய உணவுக்கும் செலவு செய்து வந்தார்.

இவரது பெற்றோர்கள் கூட பிச்சை எடுப்பவர்கள்தான். இவரது தந்தை ராமலிங்கம் வயதானவர். தாய் ராஜேஸ்வரிகண்பார்வையற்றவர். இவர்களுக்கு கிடைக்கும் பணம் நாகரத்னாவின் படிப்புச் செலவுக்கு போதுமானதாக இல்லை.

இவர்கள் தமிழ்நாட்டிலுள்ள திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து பிழைப்பதற்காக மைசூருக்கு வந்தவர்கள். இவர்கள்குடியிருந்த குடிசை கூட மழையில் அடித்துச் செல்லப்பட்டதால் இவர்கள் நடைபாதையில்தான் வசித்துவருகிறார்கள்.

இது குறித்து நாகரத்னா ஆங்கில நாளிதழுக்கு செவ்வாய்க்கிழமை அளித்துள்ள பேட்டியில் கூறுகையில், நான் 10ம்வகுப்பில் பாஸ் செய்வேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை,

நான் 9ம் வகுப்பு படிக்கும்வரை தினமும் தெருக்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தேன் .சில சமயம் என்னுடன்படிக்கும் சக மாணவர்கள் வீட்டிற்கு பக்கமாக செல்ல நேரும் போது வெட்கம், அவமானம் காரணமாக அங்கிருந்துஓடி விடுவேன்.

நான் வறுமை காரணமாக படிப்பை நிறுத்தி விடலாம் என நினைத்தேன். ஆனால் என் தந்தைதான் நான் தொடர்ந்துபடிக்குமாறு வற்புறுத்தி படிக்க வைத்தார். நானும் இப்போது 10ம் வகுப்பு பாஸ் செய்து விட்டேன்.

எனக்கு யாரும் உதவி செய்யவில்லை. எனக்கு பண உதவி செய்வதாக பலர் கூறினார்கள்.ஆனால் கூறியவர்கள்யாரும் உதவி செய்யவில்லை,

பலர் எனக்கு புத்தகம் வாங்கித்தருவதாக சொன்னார்கள். ஆனாலும் எவரும் புத்தகம் வாங்கித் தரவில்லை.

நான் மேற்கொண்டு கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்க விரும்புகிறேன். நான் நல்ல வேலையில் சேர்ந்து என்பெற்றோர்களை நல்ல நிலையில் வாழ வைக்க விரும்புகிறேன்.

நாங்கள் தெருவோரத்தில் வாழ்ந்து வருகிறோம். என் பெற்றோர்களை அங்கிருந்து அழைத்துக் கொண்டு நல்லஇடத்தில் வாழ வைக்க விரும்புகிறேன்.

என் சகோதரன் எங்களுடன் இருந்து வந்தான். பல பிச்சைக்காரர்களை அடக்கி வைத்திருக்கும் 14 வயதுள்ளஒருவன் என் சகோதரனை கட்டாயமாக இழுத்துச் சென்று விட்டான். இது வரை என் சகோதரன் திரும்பிவரவில்லை. அவன் என்ன ஆனான் எனவும் தெரியவில்லை என வருத்தத்துடன் கூறினார்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X