For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரதமருக்கு அறுவைசிகிச்சை: மருத்துவக்குழு மும்பை வந்தது

By Staff
Google Oneindia Tamil News

மும்பை:

பிரதமர் வாஜ்பாய்க்கு வியாழக்கிழமை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.

அவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர் குழு செவ்வாய்க்கிழமை மும்பை ப்ரீச் கேன்டிமருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை வந்து சேர்ந்தது.

வாஜ்பாய் ஆஸ்டியோ ஆர்த்தரடீஸ் எனப்படும் மூட்டுவலியால் அவதிப்பட்டு வந்தார். இது பொதுவாகவேவயதானவர்கள் பலருக்கும் வரக்கூடிய மூட்டு வலி. வாஜ்பாய்க்கு மூட்டு வலி அதிகமான காரணத்தால் நடக்கமுடியாமல் அவதிப்பட்டு வந்தார்.

இதையடுத்து அவருக்கு இடது காலில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யமுடிவு செய்யப்பட்டு கடந்த ஆண்டுஅக்டோபர் மாதம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சைக்குப் பின், வாஜ்பாய் சில நாட்கள் ஓய்வெடுத்தார். பின் பிசியோ தெரபி பயிற்சிஅளிக்கப்பட்டது. 1 மாதம் கழித்து வாஜ்பாய் இயல்பாக நடக்க ஆரம்பித்தார்.

அப்போது, பிரதமர் வாஜ்பாய்க்கு வலது காலில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தேவையில்லை என கூறப்பட்டது.ஆனால் வலது காலிலும் வலி அதிகமாக இருந்ததால், அந்த காலிலும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவுசெய்யப்பட்டது. அதன்படி வியாழக்கிழமை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.

இந்த அறுவை சிகிச்சையையும், வாஜ்பாய்க்கு இடது கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்த டாக்டர்சித்தரரஞ்சன் ரனவத்தான் செய்கிறார். இந்த அறுவை சிகிச்சையும் மும்பை ப்ரீச் கேன்டி மருத்துவமனையில்தான்நடைபெறவுள்ளது.

இந்த அறுவை சிகிச்சையை செய்ய டாக்டர் சித்தரஞ்சன் ரனவத்தும், அவருடைய மருத்துவக் குழுவைச் சேர்ந்தடாக்டர் நந்து லாட், டாக்டர் ஹரீஷ் பென்டே, மயக்க மருந்து நிபுணர் (அனஸ்தடீஸ்ட்) டாக்டர் என்ரிகோகாட்சிலோ மற்றும் சிரீஷ் குப்தே மற்றும் பல அலுவலர்களும் செவ்வாய்க்கிழமை மும்பை ப்ரீச் கேன்டிமருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.

இது குறித்து ப்ரீச் கேன்டி மருத்துவமனை அதிகாரிகள் தெரிவிக்கையில், வாஜ்பாய் புதன்கிழமைமருத்துவமனைக்கு வருகிறார். மருத்துவமனைக்கு வந்தவுடன் அவருக்கு அறுவை சிகிச்சைக்கு முந்தைய மருத்துவசோதனைகள் நடைபெறும்.

அவர் உடல்நிலையை பொறுத்து அறுவை சிகிச்சை வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை நடைபெறும்.

அறுவை சிகிச்சையின் போது சேதமடைந்த மூட்டு மாற்றி அமைக்கப்படும். செயற்கை மூட்டு பொறுத்தப்படும். ரூ65,000 மதிப்புள்ள சிக்மா பி.எப்.சி என்ற செயற்கை மூட்டு பொறுத்தப்படும் என்றனர்.

ரனவத்தின் மருத்துவக்குழுவினர் இந்தியாவில் 1 வார காலம் தங்கியிருப்பார்கள். அப்போது வாஜ்பாயைத் தவிரமேலும் 19 பேருக்கும் அறுவை சிகிச்சை செய்யவுள்ளனர்.

வாஜ்பாய் வரவையொட்டி மும்பை போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. சிறப்பு காவல் படை பிரதமரின்பாதுகாப்பை கவனித்துக் கொள்ளும்.

கமான்டோஸ் மருத்துவமனைக்கு அருகிலுள்ள மாடியிலிருந்து காவல் பணியில் ஈடுபடுவார்கள்.

கடலோர காவற்படையினரும், கடற்படை வீர்ரகளும் தீவிரவாதிள் யாரும் கடல் வழித் தாக்குதலில் ஈடுபடாமல்பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X