For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

15ம் தேதி முதல் தீவிர வீரப்பன் தேடுதல் வேட்டை

By Staff
Google Oneindia Tamil News

அந்தியூர்:

வீரப்பனைப் பிடிக்க அதிரடிப்படை தயாராகி வருகிறது. வீரப்பன் வேட்டை வரும் 15ம் தேதி முதல் துவங்கும்என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த திமுக ஆட்சி காலத்தில் சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க மேற்கொண்டு முயற்சிகள்தோல்வியடைந்தன. இருப்பினும், பல தமிழ்த் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் பிடிபட்டனர். மத்தியஎல்லைப் பாதுகாப்பு படையினர் சத்தியமங்கலம், பண்ணாரி, நீலகிரி, வாளையாறு காடுகளில் தங்கி வீரப்பனைத்தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், பிடிக்க இயலாமல் போனது.

அதிமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு வீரப்பனைப் பிடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில்அதிரடிப்படைக்கு வால்டர் தேவாரம் தலைமைப் பொறுப்பேற்கிறார். மத்தியப் பாதுகாப்பு படைப்பிரிவில் இருந்தவிஜயகுமாரும் தற்போது இதில் இணைந்துள்ளார்.

இருவரும் வரும் ஜூன் 15ம் தேதியிலிருந்து தேடுதல் வேட்டையைத் தொடங்குகின்றனர். இந்த தேதிக்கு முன்பேஇவர்கள் சத்தியமங்கலம் சென்று தீவிர ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர். அதிரடிப்படையினர் இந்த முறைபுதிய வியூகத்துடனும், உத்வேகத்துடனும் செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான புதிய யுக்திகள் வகுக்கப்பட்டு வருகின்றன. கோவை, நீலகிரி, தர்மபுரி, ஈரோடு மாவட்டங்களில் உள்ள22 போலீஸ் ஸ்டேஷன்கள் தற்போது அதிரடிப்படையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியிலிருந்தபோது அதிமுக தலைவி ஜெயலலிதா, வீரப்பன் இலங்கைக்குத் தப்பிச் சென்று விட்டான்எனத் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது அதே வீரப்பனைக் காட்டுக்குள் தேட அதிரடிப்படையினைஅனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X