For Daily Alerts
19ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள்
சென்னை:
பத்தாவது வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) தேர்வு முடிவுகள் ஜூன் 19ம் தேதி வெளியிடப்படவுள்ளது.
மார்ச் மாதம் 27-ம் தேதி பத்தாவது வகுப்புத் தேர்வுகள் தொடங்கின. ஏப்ரல் 9ம் தேதி தேர்வுகள் முடிந்தன.
மொத்தம் 7,73,366 பேர் தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டுமதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது.
தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தன. தற்போது ஜூன் 19ம் தேதிஅல்லது 20ம் தேதிக்குள் முடிவுகள் வெளியாகும் என கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!