கோடீஸ்வரன் அவ்ளோதானா?
சென்னை:
வெல்கம் டூ கோடீஸ்வரன்!. சரத் குமாரின் இந்தக் குரல் கடந்த ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒலிக்கவில்லை. அதற்குப் பதிலாக ஒரு மஹா சீரியல்ஒளிபரப்பானது.
பிரமாண்டமான செட், அசத்தலான கோட் சூட்கள் என சரத்குமாரின் அசத்தலில் ஒளி, ஒலிபரப்பாகி வந்த கோடீஸ்வரன் நிகழ்ச்சிக்கு துவக்கத்தில்அவ்வளவு பெயர் இல்லாவிட்டாலும் கூட போகப் போக நிகழ்ச்சி பிக் அப் ஆனது.
தமிழில் பாப்புலர் ஆகி விட்ட நிலையில் மலையாளத்திலும் நடிகர் முகேஷை வைத்து இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகத் தொடங்கியது.
கோடீஸ்வரன் நிகழ்ச்சிக்கான ஒளிப்பதிவு மற்றும் ஷூட்டிங் அனைத்தும் எம்.ஜி.ஆர். திரைப்பட நகரில்தான் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கேற்ற செட் போடும்வகையிலான ஏ.சி. அரங்கம் இங்கு மட்டுமே உள்ளது. இதற்காகவே இங்கு ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் ஏ.சி அரங்கை வாடகைக்கு எடுத்திருந்தனர்.
இந்த நிலையில் ஒரு வருட ஒப்பந்தம் முடிந்தது. திமுகவும் ஆட்சியை இழந்தது. இதையடுத்து கோடீஸ்வரன் நிகழ்ச்சியின் எதிர்காலம் குறித்து கேள்விஎழுந்தது. இனி இந்த நிகழ்ச்சி வராது என்றெல்லாம் பேச்சு எழுந்தது.
இந்தப் பேச்சுக்களை உண்மையாக்கும் விதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் இனிமேல் கோடீஸ்வரன் நிகழ்ச்சி ஒளிபரப்பாகாது என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. கையில் வைத்திருக்கும் கோடீஸ்வரன் எபிசோடுகளை சனிக்கிழமைகளில் மட்டும் ஒளிபரப்புச் செய்வது, அதற்குள் வேறு ஷூட்டிங்ஸ்பாட் பார்த்து விட்டால் அதன் பிறகு மீண்டும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஒளிபரப்பு செய்வது என சன் நிர்வாகத்தார் முடிவு செய்துள்ளார்களாம்.
இதுவரை யாருமே இந்த நிகழ்ச்சி மூலம் கோடீஸ்வரன் ஆகவில்லை. அதற்குள் அந்த நிகழ்ச்சிக்கே சோதனை வந்து விட்டது சுவாரஸ்யமானசோகம்தான்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!