அரசின் அலட்சியத்தால் தொடரும் விபத்துக்கள்
டெல்லி:
மோசமான நிலையில் இருந்த ரயில் பாலம் தான் கோழிக்கோட்டில் நடந்துள்ள ரயில் விபத்துக்குக் காரணமானதுஎனத் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான ரயில் பாலங்கள் 100 ஆண்டுகளைக் கடந்தவை. மிக மோசமானநிலையில் உள்ளவை. இந்த ரயில் பாலங்கள் சீரமைக்க அமைக்கப்பட்ட கமிட்டி அளித்த அறிக்கை கிடப்பில்போடப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள ரயில் பாலங்களைச் சீரமைப்பது சம்பந்தமான கமிட்டியை மத்திய அரசு நியமித்தது.நாட்டிலுள்ள அத்தனை ரயில் பாலங்களையும் ஆய்வு செய்து அறிக்கை தரும்படி இந்தக் கமிட்டிக்குஉத்தரவிடப்பட்டது.
உடனடியாகச் செயல்பட்ட கமிட்டி, நாடு முழுக்கப் பயணம் செய்து, அனைத்து ரயில் பாலங்களையும் ஆராய்ந்தது.1989லேயே அறிக்கையை சமர்பித்தது. இதையடுத்து ரூர்கேலா பல்கலைக்கழகதைச் சேர்ந்த நிபுணர்கள் மற்றும் ஒருதேசிய கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள் கொண்ட குழுவை அரசு அமைத்தது.
எந்தெந்த பாலங்கள் மிக மோசமாக உள்ளன என்பதைக் கண்டறியும் பொறுப்பு இந்தக் குழுவிடம் தரப்பட்டது.பின்னர் இந்தக் குழுவே கலைக்கப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.
இந்தியாவில் மொத்தம் 1,19,727 ரயில் பாலங்கள் உள்ளன. இதில் 262 பாலங்கள் மிகவும் பழுதடைந்துள்ளன.
1999ல் எச்.ஆர். கண்ணா என்பவர் தலைமையில் ஒரு கமிட்டியும் அமைக்கப்பட்டது. இந்தக் கமிட்டியும் பாலங்கள்சீரமைப்புக் குறித்து ஒரு நீண்ட அறிக்கை தயாரித்தது. ஆனால், அந்த அறிக்கை என்ன ஆயிற்று என்றேதெரியவில்லை.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!