உண்மை சொன்னதால் பொய் வழக்கு போட்டுள்ளனர்: பொன்முடி
விழுப்புரம்:
புழுத்துப்போன அரிசி எதுவும் இல்லை என உண்மையை கூறியதால், என் மீது பொய் வழக்குகள்போடப்பட்டுள்ளன என முன்னாள் தி.மு.க. அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
விழுப்புரம் அரசு அரிசி குடோனில் அத்துமீறி நுழைந்ததாகவும், அங்கிருந்த அதிகாரியை மிரட்டியதாகவும்குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.
கடலூர் ஜெயிலுக்குப் போகும் முன் விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது:
2,500 டன் புழுத்துப்போன அரிசி குடோனில் இருப்பதாக அ.தி.மு.க. அமைச்சர்கள் கூறியதால், சோதனைசெய்வதற்காக குடோனுக்கு சென்றேன்.
என்னுடன் பத்திரிக்கையாளர்களையும் அழைத்து சென்றேன். அங்கிருந்த அதிகாரியிடம் முறையாக அனுமதிபெற்ற பின்புதான் சோதனை நடத்தினேன். சோதனை செய்ததில் புழுத்துப்போன அரிசி எதுவும் இல்லை எனதெரியவந்தது. அதன் பின் நான் நிருபர்களுடன் வெளியே சென்றுவிட்டேன்.
நான் குடோனைவிட்டு பிற்பகல் 1 மணிக்கே வெளியேறி விட்டேன். மாலை 6 மணிக்குத்தான் போலீசில் புகார்கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் போலீசார் என்னை மாலை 3 மணி முதலே தேடினர். கேட்டால் மேலிடத்துஉத்தரவு என கூறுகின்றனர்.
நான் சோதனை செய்து புழுத்துப்போன அரிசி எதுவும் இல்லை என கண்டுபிடித்துவிட்டதால் என் மீது பொய்வழக்கு போட்டுள்ளனர். குத்தூசியைக் கொண்டு அதிகாரியை மிரட்டியதாகவும் பொய் புகார்கொடுக்கப்பட்டுள்ளது.
நாய்வாலை நிமிர்த்த முடியாது. அதுபோல் பொய் வழக்கு போடும் ஜெயலலிதாவையும் திருத்த முடியாது.அதிகாரிகளை மிரட்டி குடோனில் புழுத்த அரிசி இருப்பதாக பொய் சொல்ல சொல்லி இருக்கிறார் ஜெயலலிதா.
என் மீது போடப்பட்டுள்ள வழக்கை நீதிமன்றத்தில் சட்டப்படி சந்திப்பேன். போலீசார் முறைப்படி என்னிடம்விசாரணை செய்யாமல் கைது செய்துள்ளனர் என்றார் பொன்முடி.
கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பொன்முடிக்கு முதல்வகுப்பு வசதி வழங்கப்பட்டிருப்பதால் அவருக்குதேங்காய் நார் தலையணை, மெத்தை ஆகியவை கொடுக்கப்பட்டன. புதன்கிழமை காலை டிபனாக அவருக்குசப்பாத்தி குருமா வழங்கப்பட்டது. மதிய உணவாக எல்லோருக்கும் கொடுப்பது போல் சாப்பாடு, தயிர். பால்வழங்கப்பட்டது. சிறையில் கொடுக்கப்பட்ட உணவை வாங்கி, பொன்முடி அமைதியாகச் சாப்பிட்டார்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications