தமிழகம் முழுவதும் 24, 000 திமுகவினர் கைது
சென்னை:
முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக தமிழகத்தில் 2 வது நாளாகப் பதட்டம் தொடர்கிறது.
தமிழகத்தில் இயல்புவாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் ஆங்காங்கே பஸ்களுக்குத் தீ வைப்பு மற்றும் கல்வீச்சுச் சம்பவங்கள் நடந்துள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 24, 000 திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே போலீஸார் உதவியுடன் ஒரு சிலபஸ்கள் இயங்கி வருகின்றன. திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட 1,800 க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலியில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அங்கு முக்கிய திமுக பிரமுகர்களான ஏ.எல்.சுப்ரமணியம்மற்றும் கருப்பசாமி பாண்டியன் உள்பட 500 க்கும் மேற்பட்ட திமுக பிரமுகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் முக்கிய திமுக பிரமுகர்கள் உள்பட 200 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மற்றும் நெல்லிக்குப்பத்தில் பல இடங்களில் பஸ்களுக்குச் தீ வைக்கப்பட்டன.
தண்டவாளம் தகர்ப்பு:
நெல்லிக்குப்பத்தில் 50 அடி தூரம் தண்டவாளம் தகர்க்கப்பட்டு அங்கு தீ வைக்கப்பட்டது. நெல்லிக்குப்பத்தில் திமுக பிரமுகர்கள்சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
அசம்பாவிதச் சம்பவம் எதுவும் நடைபெறாத வகையில் மாநிலம் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications