For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பந்த் வெற்றி: தமிழகத்தில் இயல்பு நிலை பாதிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணி அழைப்பு விடுத்திருந்த முழு அடைப்புக்கு தமிழகம் முழுவதும் முழு ஆதரவு கிடைத்தது.

4,000 பேர் கைது:

முழு அடைப்பையொட்டி மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை திமுக, பாஜக மற்றும் எம்.ஜி.ஆர்.அதிமுகவைச் சேர்ந்த 4,000 பேர்கைது செய்யப்பட்டனர்.

சென்னை மத்திய சிறை முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை, மதுரை உள்பட பல நகரங்களில் கல்வீச்சுச்சம்பவங்கள் நடந்தன.

பாக்குவரத்து ஸ்தம்பிப்பு:

மாநிலம் முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. 20 சதவீத அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன ஆனாலும் அதில்பயணிகள் மிகக் குறைவாகவே இருந்தனர்.

பள்ளி, கல்லூரிகளைப் திறப்பது குறித்து, சம்பந்தப்பட்ட பள்ளி கல்லூரி முதல்வர்களுக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் சிலபள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டிருந்தன. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டிருந்தபோதிலும் குறைவான மாணவ, மாணவியரே வந்திருந்தனர்.

தனியார் அலுவலகங்கள் எதுவும் திறக்கப்படவில்லை. அரசு அலுவலகங்கள் திறக்கப்பட்டிருந்தபோதிலும், மிக்ககுறைவான ஊழியர்களேபணிக்கு வந்திருந்தனர்.

அதிமுகவினர் தகராறு:

மாநிலம் முழுவதும் பல நகரங்களில் தனியார் நிறுவனங்களைத் திறக்கக்கோரி அதிமுகவினர் தகராறு செய்தனர். ஆங்காங்கே பஸ் எரிப்பு, பஸ்கள்மீது கல்வீச்சு போன்ற சில சம்பவங்கள் தவிர பந்த் மிக அமைதியாக இருந்தது.

அசம்பாவிதச் சம்பவங்கள் எதுவும் நடைபெறாத வகையில் மாநிலம் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

சென்னையில் 17,000 போலீஸார்:

முழு அடைப்பு நடப்பதையொட்டி சென்னை நகரில் மட்டும் 17, 000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

கர்நாடகா, ஆந்திராவிலிருந்து சென்னை வரும் பஸ் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பந்த்துக்காக மட்டுமின்றி,தமிழகத்தில் நிலைமை சீராகும் வரை, ஆந்திராவிலிருந்து பஸ்கள் எதுவும் தமிழ்நாட்டிற்கு இயக்கப்பட மாட்டாது என்று ஆந்திரப் பிரதேசப்போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு போக்குவரத்துத் துறை செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்புடன் ஒரு சில அரசு பஸ்கள்இயங்கின என்றார்.

ஆனால், ரயில் போக்குவரத்தில் சிறிதும் தடையில்லை. சென்னையிலிருந்து செல்லும் ரயில்கள் வழக்கம்போல் இயங்கின. அதே போல் பிறமாநிலங்களிலிருந்து சென்னைக்கு வரும் ரயில்களும் வழக்கம் போல் இயங்கின என்றார் ரயில்வே செய்தித்தொடர்பாளர்.

பா.ஜ.கவினர் கைது:

சென்னை பனகல் பூங்கா அருகே சாலை மறியல் செய்ய முயன்றதாக தமிழக பாஜக தலைவர் கிருபாநிதி, பாஜக எம்.எல்.ஏ. லட்சுமணன்உள்பட 700 க்கும் மேஇதனால்ற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

கருணாநிதி கைது செய்யப்பட்ட விதம் குறித்து மாநிலம் முழுவதும் திமுக, பாஜக பிரமுகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஐகோர்ட் முன்பு தர்ணா:

கைது செய்யப்பட்டுள்ள கருணாநிதியை விடுவிக்கக் கோரி வக்கீல்கள் சிலர் சென்னை உயர்நீதிமன்ற வாசலில் தர்ணா நடத்தினர். இங்கு அதிமுகவழக்கறிஞர்களுக்கும் திமுக வழக்கறிஞர்களுக்கும் இடையே பெரும் தகராறு மூண்டது. இரு தரப்பினரும் நீதிமன்றத்துக்குள்ளேயேஊர்வலம் நடத்தினர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பதற்றம் நிலவியது.

ஆந்திராவில் எதிரொலி:

தமிழக பந்த்தையொட்டி ஆந்திராவிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. விஜயவாடாவில் 50 க்கும் மேற்பட்ட சமதா கட்சிதொண்டர்கள், உடனடியாக கருணாநிதியை விடுதலை செய்யக்கோரியும், ஜெயலலிதா அரசைக் கலைக்கக்கோரியும் சப்-கலெக்டர்அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X