வருகிறார் முஷாரப்....
டெல்லி:
காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காத வரை இந்தியப் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துவதால்எந்தப் பயனும் ஏற்படாது என பாகிஸ்தான் அதிபரும் ராணுவ ஆட்சியாளருமான பர்வேஸ் முஷாரப் கூறினார்.
வரும் 14ம் தேதி 3 நாள் பயணமாக முஷாரப் இந்தியா வருகிறார். அவர் 15ம் தேதி இந்தியப் பிரதமர்வாஜ்பாயுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தப் பேச்சுவார்த்தைகள் டெல்லியில் இல்லாமல் ஆக்ராவில்நடக்கவுள்ளன.
தாஜ்மகால் அருகே வாஜ்பாய்-முஷாரப் பேச்சு:
இதற்காக ஆக்ராவும் தாஜ்மகாலும் அழகுபடுத்தப்பட்டு வருகின்றன. திரும்பிய பக்கமெல்லாம் போலீஸ் தலைகள்தான் தென்படுகின்றன. ஆக்ரா கிட்டத்தட்ட இரும்புக் கோட்டை போல காட்சியளிக்க ஆரம்பித்துவிட்டது.பாதுகாப்பு மிக பலமாக உள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி சுற்றுச்சூழல் சட்டப்படி தாஜ்மகால் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இதனால்,தாஜ்மகால் அருகே முஷாரபை அழைத்துச் செல்ல பேட்டரியால் இயங்கும் வேன் பயன்படுத்தப்படவுள்ளது.அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளின்டன் வந்தபோது கூட இதே போன்ற ஒரு வாகனம் தான்பயன்படுத்தப்பட்டது.
அமைதித் தூதர் விடுதலை:
இந்தியா வரும் முன்பாக பல நல்லெண்ண நடவடிக்கைகளையும் முஷாரப் எடுத்து வருகிறார். பல ஆண்டுகளுக்குமுன் பாகிஸ்தானுக்குள் உரிய அனுமதி இல்லாமல் நுழைந்து கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியஅமைதித் தூதர் விகாஸ் வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.
உலகெங்கும் அமைதியைப் பரப்புவதற்காக இவர் சைக்கிளில் 14 நாடுகள் சுற்றிவிட்டு பாகிஸ்தானுக்குள்நுழைந்தபோது காைதானர். சிறையில் அடைக்கப்பட்டார்.
பாக். போர் கைதிகள் விடுதலை:
இந்தியாவும் பல நல்லெண்ண நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்திய சிறைகளில் உள்ள பாகிஸ்தானைச் சேர்ந்தபோர்க் கைதிகள் அனைவரையும் விடுவிக்க முடிவு செய்துள்ளது. இந்திய கடல் எல்லையில் தெரியாமல் நுழையும்மீனவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் முடிவு செய்துள்ளது.
மேலும் பாகிஸ்தானைச் சேர்ந்த 20 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கவும், இந்திய-பாகிஸ்தான்அறிவுஜீவிகள் இடையே அடிக்கடி கூட்டங்கள் நடத்தவும் இந்தியா முடிவெடுத்துள்ளது.
பாகிஸ்தான் வரவேற்பு:
பாகிஸ்தான் சிறைக் கைதிகளை விடுதலையை வரவேற்றுள்ளது பாகிஸ்தான். ஆனால், பாகிஸ்தான் சிறையில் உள்ளஇந்திய போர் கைதிகளை விடுவிப்பது குறித்து அந் நாடு ஏதும் பேசாமல் இருந்து வருகிறது.
பர்வேஸ் பேட்டி:
இந் நிலையில் பர்வேஸ் பாகிஸ்தானில் அளித்துள்ள சிறப்புப் பேட்டியில் கூறுகையில், இப்போது முக்கியப்பிரச்சனையே காஷ்மீர் தான். அதைத் தீர்க்காமல் இந்தியாவுடன் உறவை சீர்படுத்துவது சாத்தியமில்லை.
இப்போதைய பேச்சுவார்த்தை கூட இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு முதல் படியாக இருக்கும் என்று தான்நினைக்கிறேன்.
50 ஆண்டு காலமாக சண்டையிட்டு இரு தரப்பிலும் ரத்தம் சிந்தியிருக்கிறோம். இனி நண்பர்களாக இருக்கவேண்டுமெனில் இரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் மீதான மன நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் இருக்கும்போது ஹூரியத் அமைப்புத் தலைவர்களை சந்தித்துப் பேசவும் விரும்புகிறேன்.
காஷ்மீரில் நடந்து வருவது (தீவிரவாதம்) ஒரு விடுதலைப் போராட்டமாகும். இப்போது பேச்சுவார்த்தையைதுவங்குவது கூட அந்த போராட்டத்தை ஏதாவது ஒரு வகையில் பாதிக்கும்.
இவ்வாறு முஷாரப் கூறியுள்ளார்.
-
இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக தமிழர் நியமனம்! யார் இந்த என்.எஸ். ராஜா சுப்ரமணி? பின்னணி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications