For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேபாளம்: தீவிரவாதிகள் தாக்கி 34 போலீசார் பலி

By Staff
Google Oneindia Tamil News

காத்மாண்டு:

நேபாளில் குடியரசை அமல்படுத்த வேண்டும் என போராடி வரும் மாவோயிஸ்ட்தீவிரவாதிகள் (இடதுசாரி தீவிரவாதிகள்) சனிக்கிழமை நடத்திய 2 வெவ்வேறுசம்பவங்களில் 34 போலீசாரை கொன்றுள்ளனர்.

நாட்டில் நியாயமற்ற.சுதந்திரத்தை அடக்கும் கடுமையான சட்டங்கள் இருப்பதாக கூறிஅதை எதிர்த்து ஜூலை மாதம் 12ம் தேதி முழு அடைப்புக்கு மாவோயிஸ்ட்தீவிராதிகள் அழைப்பு விடுத்திருந்தனர். அந்த முழு அடைப்புக்கு முன் இந்த வன்முறைசம்பங்கள் நடைபெற்றுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

சனிக்கிழமை போலீஸ் அதிகாரிகள் நிருபர்களிடம் கூறுகையில், காத்மாண்டுவுக்கு 350கி.மீ. தொலைவில் இருக்கும் லாம்ஜங் மாவட்டதிலிருக்கும் பிச்சார் டவுனில் நடந்தகலவரத்தில் 12 போலீசார் கொல்லப்பட்டனர்.

நுவாகோட் மாவட்டம் தாருகா டவுனில் நடந்த மற்றொரு தாக்குதலில் 12 போலீசார்கொல்லப்பட்டனர்.

இந்த 2 வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்த போதும் போலீஸ் முகாம்கள் தாக்கிமுழுமையாக அழிக்கப்பட்டன என்றனர்.

நேபாள தலைநகரில் நிலவி வரும் பாதுகாப்பற்ற சூழ்நிலை தீவிரவாதிகளுக்குசாதகமாக உள்ளது.

புதன்கிழமை தீவிரவாதிகள் தலைமை நீதிபதி கேஷாப் உபாத்யாயவின் வீட்டிற்கு முன்சக்தி வாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். ஆனால் அதிரிஷ்டவசமாக அதில்ஒருவரும் காயமடையவில்லை.

உபாத்யாயாவின் வீடு, நேபாள பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலாவின் வீட்டிற்குஅருககே உள்ளது. அந்தப் பகுதி பாதுகாப்பு படையின் பாதுகாவலில் இருக்கும் பகுதி.

அந்தப் பகுதியிலேயே தீவிரவாதிகள் வெடிகுண்டை வெடிக்கச் செய்திருப்பதுஅவர்கள் பலத்தை காட்டுதிறது என தீவிரவாத அமைப்புக்கு நெருங்கிய காத்மாண்டுகமாண்ட் என்ற இயக்கத்தினர் செய்தியாளர்களிடம் கூறினர்.

புதன்கிழமை நகர சபையை சேர்ந்த அதிகாரிகள் சென்று கொண்டிருந்தவாகனத்தையும் தீவிரவாதிகள் தீயிட்டு கொளுத்தினர்.

ஜுன் மாதம் 2ம் தேதி தீவிரவாதிகள் கம்பள (கார்பெட்) தொழிற்சாலை ஒன்றைதீவைத்து கொளுத்தினர். இதில் 50,000 டாலர் மதிப்புள்ள கம்பளங்கள்சேதமடைந்துவிட்டதாக அந்த தொழிற்சாலை உரிமையாளர்கள் கூறியுள்ளனர்

கடும் இழப்பு ஏற்பட்டதால் அந்த தொழிற்சாலையிவ் பணிபுரிபவர்களுக்க சம்பளமும்வழங்கப்படவில்லை. ஜூன் மாதம் 3ம் தேதி தீவிவாதிகள் காத்மாண்டுவின் புறநகர்பகுதியில் இருக்கும் ஜவுளி நெய்யும் தொழிற்சாலையையும் தீவைத்து கொளுத்தினர்

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், போலீசார் தீவிரவாதிகளை எதிர்த்து போராடமுடியாத நிலையில் இருக்கிறார்கள்.

இது அரசியல் பிரச்சனையாக இருந்தால் இதை அரசாங்கம் அரசியல் முறைப்படி தீர்க்கவேண்டும். இது தீவிரவாத இயக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால் அரசு அதைவெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவித்தால்தான் இந்தபிரச்சனையை வேறுவிதமாக சமாளிக்க முடியும் என்கின்றனர்.

கொய்ராலாவின் அரசு தங்கலைப் புறக்கணிப்பதாக போலீசார் குறை கூறுகின்றனர்.ஜூன் மாதம் 29ம் தேதி அரசு தனது கொள்கை அறிக்கையில் ராணுவத்தை பலப்படுத்தஇருப்பதாக கூறியது. ஆனால் போலீசை முழுவதுமாக புறக்கணித்துவிட்டது என்றனர்.

பல மாவட்டங்களிலும் தீவிரவாதிகளை அடக்குவதற்கு ராணுவத்தை அனுப்புவது எனமே மாதம் 14ம் தேதி அரசு முடிவு செய்தது. இந்த நடவடிக்கை தீவிரவாதிகளைபோலீசாரால் அடக்கமுடியவில்லை என்பதால் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனாலும் இது நாட்டில் ராணுவ ஆட்சியை கொண்டுவந்துவிடுமோ என சிலர்அஞ்சுகின்றனர்.

இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத அரசியல் நோக்கர் ஒருவர் கூறுகையில்,மாவட்டங்களில் ராணுவத்தினர் தீவிரவாதிகளை கட்டுப்படுத்தலாம், தலைநகரில்இருக்கும் தீவிரவாதிகளை யார் கட்டுப்படுத்துவது?

தலைநகரிலும் ராணுவத்தை உபயோகப்படுத்துவது என அரசு முடிவெடுத்தால் அதுராணுவ ஆட்சியை வரவேற்பது போலாகும் என்றார்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X