வாஜ்பாய்-முஷாரப் பேச்சுவார்த்தை தொடங்கியது
ஆக்ரா:
பிரதமர் வாஜ்பாய், பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் இடையில் உயர் மட்ட பேச்சுவார்த்தைஞாயிற்றுக்கிழமை காலை 11.45 மணிக்குத் துவங்கியது.
காலையில் டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து கிளம்பி சிறப்பு விமானம் மூலம் 9.45 மணிக்கு ஆக்ராவந்தார் முஷாரப். சனிக்கிழமை நள்ளிரவிலேயே பிரதமர் வாஜ்பாய் ஆக்ரா வந்துவிட்டார்.
முஷாரப் ஆக்ராவின் மிகப் பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டார்.
பின்னர் சரியாக 11.45 மணிக்கு வாஜ்பாய் தங்கியுள்ள ஜேபி பாலஸ் ஹோட்டலுக்கு முஷாரப் வந்தார்.
அவரை ஹோட்டல் வாசலில் பிரதமர் வாஜ்பாய் கை குலுக்கி வரவேற்றார். வாஜ்பாய் தனது வழக்கமான பாணியில்குர்தா அணிந்திருந்தார். முஷாரப் தனது ராணுவ உடையைக் கலைந்துவிட்டு கறுப்பு பேண்ட், வெள்ளை சட்டையில்வெகு காஷூவலாக வந்திருந்தார்.
இருவரும் சுமார் 1 நிமிடம் கை குலுக்கிக் கொண்டிருந்தனர். பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுக்க வசதியாகஇரு தலைவர்களும் நெருங்கி நின்றனர். ஆனால், வாஜ்பாயின் முகத்தில் இருந்த புன்னகை முஷாரபிடம் இல்லை.ராணுவ இறுக்கத்துடன் தான் அவர் இருந்தார்.
பின்னர் அவரை இந்திய அமைச்சர்கள் அத்வானி, ஜஸ்வந்த் சிங், முரசொலி மாறன், யஷ்வந்த் சின்ஹா ஆகியோர்வரவேற்றனர்.
அடுத்து பிரதமர் வாஜ்பாயும், அதிபர் முஷாரபும் தனியே பேச்சுவார்த்தையைத் தொடங்கினர். இது அரை மணிநேரம் நடக்கும். இதில் தான் எந்தெந்த பிரச்சனைகள் குறித்து விவாதிப்பது என்பது குறித்து இருவரும் முடிவுசெய்வர்.
பின்னர் அமைச்சர்கள், அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications