மனித உரிமை கமிஷனிடம் தி.மு.க. புகார்
சென்னை:
குடும்பத்தினருடன் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதற்கு தமிழக போலீசின் அராஜக போக்குதான் காரணம்என மனித உரிமை கமிஷனிடம் தி.மு.க. புகார் கொடுத்து உள்ளது.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
சென்னை அண்ணா நகரில் வசித்து வந்த ரமேஷ் , தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார். அந்தத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் இந்த புகார் மனுவை கொடுத்து உள்ளேன்.
ரமேஷ் தற்கொலைக்கு போலீசார்தான் காரணம். ரமேஷ் வீட்டிற்கு அடிக்கடி போலீசார் வந்து சென்றதும்,நள்ளிரவில் வந்து மிரட்டியதும், ரமேஷின் வீட்டிற்கு அருகில் இருப்பவர்கள் வாயிலாக தெரிய வந்துள்ளது.
தான் எழுதிய கடிதத்திலும்,போதைப் பொருள் வைத்திருந்ததாக தன் மேல் போலீசார் பொய் வழக்கு போட்டுவிடுவார்கள் என்ற பயத்தின் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக ரமேஷ் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. ஆட்சியில் போதைப் பொருள் வைத்திருந்ததாக வழக்குகள் போடப்படுவது சகஜம். சென்ற முறைஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது உயர் நீதிமன்ற நீதிபதியின் மருமகன் மீது கஞ்சா வைத்திருந்ததாக வழக்குபோடப்பட்டது இதற்கு எடுத்துக்காட்டு.
போலீஸ் தங்கள் கையில் உள்ள போதைப் பொருளை, ஆட்சியில் உள்ளவர்களின் உத்தரவின் பேரில் அவர்களின்அரசியில் எதிரிகள் வீட்டில் வைத்து விடுகின்றனர். பின் அது தொடர்பாக வழக்கு போடுகின்றனர். தமிழகத்தில்அராஜக ஆட்சி நடப்பதற்கு இது போதுமான ஆதாரம்.
ரமேஷ் தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவதன் மூலம் போலீஸ்அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
ரமேஷ் தனது குடும்பத்தாருடன் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசாரின் அத்துமீறல்கள் குறித்துவிசாரித்து நீதி வழங்கவேண்டும் என்றும் கோரியுள்ளார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications