For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

3 நாடுகள் கிரிக்கெட்: இந்தியாவுக்கு முதல் வெற்றி

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கையில் நடந்து வரும் 3 நாடுகளுக்கு இடையிலான கொக்கோ-கோலா கிரிக்கெட் தொடரில், சனிக்கிழமைநடந்த போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது இந்திய கிரிக்கெட் அணி.

டாஸை வென்ற இலங்கை, முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. கடந்த 3 ஆட்டங்களிலும் தோல்வியைவெற்றிகரமாகத் தழுவிய இந்திய கிரிக்கெட் அணியினர், கொஞ்சம் சுறுசுறுப்புடனேயே பீல்டிங் செய்யச்சென்றனர்.

நியூசிலாந்துக்கு எதிரான கடந்த போட்டியில், அம்பயரை எதிர்த்துப் பேசிய காரணத்திற்காக, இலங்கையுடனானசனிக்கிழமை போட்டியில் விளையாட இந்திய அணி கேப்டன் கங்குலிக்குத் தடை விதிக்கப்பட்டது.

இதனால், கங்குலி இல்லாமலேயே களத்தில் இறங்கினர் இந்திய அணியினர். தண்டுல்கரும் இல்லாத நிலையில்,எப்படித்தான் வெற்றி பெறப் போகிறதோ என்று கிரிக்கெட் ரசிகர்கள் சோர்ந்து போயிருந்தனர்.

இதை மெய்ப்பிக்கும் வகையில், முதலில் பேட் செய்த இலங்கை அணி வீரர்கள், இந்திய பந்து வீச்சாளர்களின்பந்துகளை விளாசத் தொடங்கினார்கள்.

துவக்க ஆட்டக்காரர்களாகிய ஜெயசூர்யாவையும் கலுவிதரனாவையும் இந்திய பவுலர்களால் பிரிக்கவேமுடியவில்லை. இந்த 2 பேரும் சேர்ந்து கிடைத்த பந்துகளையெல்லாம் எல்லைக் கோட்டுக்கு விரட்டிக் கொண்டேஇருந்தனர்.

இலங்கை 103 ரன்களை எடுத்தபோதுதான், இந்தியாவுக்கு முதல் விக்கெட் கிடைத்தது. 57 ரன்கள் எடுத்த நிலையில்ஹர்பஜன்சிங் வீசிய பந்தை ஜெயசூர்யா அடிக்க, அதை அற்புதமாகப் பிடித்தார் குரேசியா. இது நடந்தது 25வதுஓவரில்.

ஜெயசூர்யா பெவிலியனுக்குத் திரும்பியதும், அட்டப்பட்டு பிட்சிற்குள் இறங்கினார். அவரும் தன்னுடைய அதிரடிஆட்டத்தைக் காட்ட ஆரம்பித்தார்.

ஆனாலும், அடுத்த 10 ஓவர்களுக்குள்ளாகவே கலுவிதரனாவும், தொடர்ந்து ஜெயவர்த்தனாவும் ஆட்டமிழக்கவே,இலங்கை அணி தள்ளாட ஆரம்பித்தது.

அடுத்த சிறிது நேரத்திலேயே அட்டப்பட்டுவும் ஆட்டமிழக்கவே, இலங்கை அணியை முழுக்க முழுக்க தன் வசம்கொண்டு வந்தனர் இந்தியப் பந்து வீச்சாளர்கள்.

இந்திய அணியின் பந்து வீ"ச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல், அடுத்து வந்த அனைத்து இலங்கை வீரர்களும், பிட்சைஎட்டிப் பார்த்து விட்டு விரைந்து பெவிலியனுக்குத் திரும்பினர்.

இதனால் 183 ரன்களுக்க அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இலங்கை அணி. இந்திய அணியில்,சோதியைத் தவிர அனைத்துப் பவுலர்களுக்கும் விக்கெட் கிடைத்தது. கான், நேஹ்ரா, ஹர்பஜன் ஆகியோருக்குதலா 2 விக்கெட்டுகளும், பதானி, யுவராஜ், ஷேவாக் ஆகியோருக்கு தலா 1 விக்கெட்டும் கிடைத்தன.

இதைத் தொடர்ந்து, மதியச் சாப்பாட்டை நன்றாகச் சாப்பிட்டு வந்த, இந்திய அணியினர் உண்மையிலேயேபொறுப்புடன் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அப்படி நினைப்பதற்குள்ளாகவே முதல் விக்கெட் விழுந்து விட்டது. ஒரே ஒரு ரன் இந்தியா எடுத்திருந்தநிலையில், அதுவும் 2வது பந்திலேயே குரேசியாவை கிளீன் போல்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பினார் இலங்கைபந்து வீச்சாளர் வாஸ்.

அதற்குப் பிறகு, ஷேவாக்கும் லக்ஷ்மணும் பொறுப்புடன் விளையாடி, நிதானமாக இந்தியாவின் ஸ்கோரைஉயர்த்தினர். இந்தியாவின் ஸ்கோர் 67ஆக இருந்தபோது, ஷேவாக் அவுட் ஆனார். இருந்தாலும், நம்பிக்கைஇழக்காத லக்ஷ்மண், இன்றைய கேப்டன் திராவிட்டோடு சேர்ந்து மளமளவென்று இந்திய அணியின் ஸ்கோரைஉயர்த்தினார்.

இதன் விளைவாக, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை இந்திய கிரிக்கெட் அணி வென்றது.லக்ஷ்மண் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கே ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம், கங்குலி இல்லாமலேயே (இல்லாமல் இருந்தால்தான்) இந்திய அணி வெற்றிபெற முடியும்என்று நிரூபித்துள்ளனர் இந்திய அணியினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X