சுதாகரன் நண்பர் மீது நடராஜன் பாய்ச்சல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனிடம் பணம் வாங்கியதாக சலாகுதீன் கூறியதைசசிகலாவின் கணவர் நடராஜன் மறுத்தார்.

சுதாகரன் தான் நடத்தி வந்த மன்றத்தில் உதவியாளராக இருந்த கோபுஸ்ரீதரைத் தாக்கியதாகப் புகார் தரப்பட்டதைஅடுத்து, அவர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.

அவருடன் சேர்த்து அவரது நண்பர்களான தொழிலதிபர்கள் சலாகுதீன் மற்றும் மொய்தீன் ஆகிய இரட்டையர்மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மொய்தீன் சிறையில் உள்ளார். சலாகுதீன் தலைமறைவானார்.

இதற்கிடையில் சுதாகரன் நண்பர் சலாகுதீனின் மனைவி இர்பானா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த ஒருமனுவில் கூறியிருப்பதாவது:

என் கணவருக்கும் சுதாகரனுக்கும் ஜெ.ஜெ. டிவி நடத்தப்பட்ட காலத்தில் தான் வியாபார ரீதியான சம்பந்தம்இருந்தது. ஆனால் இப்போது இல்லை.

ஜெயலலிதா சிறையிலிருந்த போது, அவரது வீட்டிலிருந்து நகைகளையும் பணத்தையும் சுதாகரன் திருடிவிட்டார்என்றும் அதை அவர் எங்கே வைத்திருக்கிறார் என்றும் என் கணவரிடம் மிரட்டிக் கேட்டார்கள்.

அதற்கு அவர் தெரியாது என்று சொல்லி விட்டார். இதனால் கோபமடைந்து, என் கணவரை பழி வாங்கவே அவர்மீது பொய் வழக்குப் போட்டுள்ளனர். மேலும், என் கணவரும் முதல்வர் ஜெயலலிதாவின் துணைச்செயலாளரும்டெலிபோனில் பேசிக் கொண்ட "டேப்" ஆதாரம் என்னிடம் உள்ளது என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

சுதாகரன் தான் எடுத்த பணத்தை யார் யாருக்கு கொடுத்தார் என்று சலாகுதீன், துணைச்செயலாளரிடம்டெலிபோனில் கூறியுள்ளார். அதன்படி, தனது சித்தப்பா நடராஜனுக்கும் ரூ.15 கோடி கொடுத்தார் என்றுகூறப்பட்டுள்ளது.

ஆனால், தான் பணம் எதுவும் வாங்கியதை மறுத்த சசிகலாவின் கணவர் நடராஜன் கூறியதாவது:

நான் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ள லண்டன் சென்றிருந்தேன். அதை முடித்துவிட்டு இப்போது தான் சென்னைவருகிறேன்.

சலாகுதீன் மனைவி கொடுத்த புகாரில் நானும் பணம் வாங்கியதாகக் கூறப்ட்டுள்ளது. தலைமறைவாக இருக்கும்ஒரு குற்றவாளி முதல்வர் அலுவலகத்துக்கு நேரடியாக போனில் பேசியிருக்கிறார் என்றால் அதை என்னால் நம்பமுடியவில்லை.

சலாகுதீன் தான் எனக்கு 5 ஆயிரம் டாலர் பணம் தர வேண்டும். கடந்த 93 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் இருந்த போதுஎன் நண்பரிடம் வாங்கிக் கொடுத்த அதை அவர் இன்னும் திருப்பித் தரவில்லை.

மேலும் சுதாகரனுக்கு அவன் மதுரையில் ஒரு கல்லூரியில் படிக்கும்போது என் நகையை அடகு வைத்துக்கொடுத்தேன். அதையே திருப்பித் தரவில்லை.

எனக்கும் அவனுக்கும் பல ஆண்டுகளாக தொடர்பே இல்லை. அவன் கல்யாணத்துக்குக் கூட நான் போக வில்லை.இந்நிலையில் அவன் எனக்கு ரூ.15 கோடி கொடுத்திருக்கிறான் என்று சொல்வது காமெடியாக இருக்கிறது.

இவ்வாறு புகார் செய்திருக்கும் சலாகுதீன் மீது நான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப் போகிறேன் என்றுநடராஜன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+