மனித உரிமை கமிஷனிடம் ஸ்டாலின் மீண்டும் புகார்
சென்னை:
மனித உரிமை கமிஷனிடம் சென்னை மாநகர மேயர் மு.க. ஸ்டாலின் மீண்டும் ஒரு மனுவைத் தாக்கல்செய்துள்ளார்.
தொடக்கத்திலேயே நான் தெரிவித்துக் கொள்வது என்னவெனில், இம்மாதம் 23ம் தேதி முதல் பிரதிவாதி(உள்துறைச் செயலாளர்) எழுதிய கடிதம் செல்லத் தக்கதும் அல்ல, ஏற்றுக் கொள்ளத் தக்கதும் அல்ல என்பதுதான்.
ஜூன் 30ம் தேதி, அத்துமீறி என் வீட்டில் நுழைந்த போலீசார் என் குடும்பத்தாரிடமும் வேலைக்காரர்களிடமும்மனிதாபிமானமற்ற முறையில் நடந்துள்ளனர். காட்டுமிராண்டித்தனமாக அவர்களைத் தாக்கியுமுள்ளனர். குறிப்பாகஎன் வீட்டுப் பெண்களிடம் அநாகரிகமான முறையில் நடந்துள்ளனர்.
இவற்றைக் குறிப்பிட்டு, சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பிரதிவாதிக்கு நோட்டீஸ் அனுப்பக்கோரி, மனித உரிமை கமிஷன் அதிகாரியிடம் கேட்டுக் கொண்டேன்.
நீதிபதி ராமன் தலைமையிலான ஒரு நபர் விசாரணைக் கமிஷனை தமிழக அரசு 7ம் தேதி நியமித்துள்ளது.கருணாநிதி மற்றும் 2 மத்திய அமைச்சர்கள் கைது செய்யப்பட்ட போது, போலீசார் அத்துமீறி நடந்துகொண்டார்களா என்பது குறித்து மட்டுமே அந்த விசாரணைக் கமிஷன் விசாரிக்க அமைக்கப்பட்டுள்ளது.
என் வீட்டில் போலீசாரின் அத்துமீறல் பற்றி இந்த ஒரு நபர் விசாரணைக் கமிஷன் விசாரிக்கவில்லை. எனவே என்புகார் தொடர்பாக, முதல் பிரதிவாதி அளித்துள்ள பதில் ஏற்கத்தக்கதல்ல.
மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் (1993) பிரிவு 36ன் படி, என் மனுவை விசாரிக்காமல் இருக்க முடியாது.
மனித உரிமைகள் மீறப்படும்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்என்பதற்காகத்தான் மனித உரிமைச் சட்டங்கள் இயற்றப்படுகின்றன.
மரியாதைக்குரிய மாநில மனித உரிமை கமிஷன் உடனடியாக உகந்த நடவடிக்கை எடுப்பதன் மூலம் நீதி வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications