மசூதிக்குள் புகுந்த 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை
காஷ்மீர்:
திங்கள்கிழமை அதிகாலை பாராமுலா மாவட்டம் குன்ஷாருக்கு அருகில் கொய்கானில் இருக்கும் மசூதிக்குள்பதுங்கிய 3 தீவிரவாதிகளும் ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணி அளவில் 3 முஸ்லீம் தீவிரவாதிகள் கொய்கானில் இருக்கும் ஒரு மசூதிக்குள்சென்று பதுங்கிக் கொண்டனர். தீவிரவாதிகள் மசூதிக்குள் பதுங்கிய தகவல் கிடைத்ததும் ராணுவ வீரர்கள் அந்தஇடத்தை சுற்றி வளைத்தனர்.
மசூதிக்குள் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளை சரணடையுமாறு ராணுவ வீரர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால்தீவிரவாதிகள் சரணடைய மறுத்தனர்.
காலை 10.15 மணி அளவில் அவர்கள் ராணுவ வீரர்களை நோக்கி சுட ஆரம்பித்தனர். ராணுவத்தினரும் பதிலுக்குதிரும்ப சுட்டனர். இதில் மசூதிக்குள் பதுங்கி இருந்த 3 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
இது குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
தீவிரவாதிகள் மசூதிக்குள் சென்று பதுங்கிக் கொண்ட செய்தி கிடைத்ததும், மசூதி மீது ராணுவ வீரர்கள் தாக்குதல்நடத்துவதை தடுக்க அந்த பகுதி மக்கள் முயன்றனர். ராணுவ வீரர்களின் தாக்குதலால் மசூதிக்கு சேதம் ஏற்படக்கூடும் என்ற பயம் காரணமாகத்தான் அவர்கள் ராணுவ வீரர்களைத் தடுக்க முயன்றனர்.
ஆனால், மசூதி சேதமடையாத அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்ககைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றுராணுவம் உறுதி அளித்த பின்னர்தான் அந்த மக்கள் அவ்விடத்தை விட்டு அகன்றனர்.
மசூதிக்குள் இருந்த தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர். அங்கு இப்போது அமைதி நிலவுகிறது. இந்தத்துப்பாக்கிச் சண்டையில் ஒரு ராணுவ வீரர் காயமடைந்தார்.
கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளில் ஒருவர் ஹிஜ்புல் முஜாஹுதின் அமைப்பைச் சேர்ந்தவரான முஸ்தபாகான்என்பவர். இவர் ஹிஜ்புல் முஜாஹுதின் அமைப்பின் கமான்டர். இவர் காஷ்மீரில் நடைபெற்ற பல தீவிரவாதநடவடிக்கைகளுக்காக தேடப்பட்டு வந்தவர்.
தீவிரவாதிகள் கொல்லப்பட்டு விட்டாலும் இன்னமும் அந்த பகுதி ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள்தான் உள்ளது.மசூதிக்குள் இறந்து கிடந்த தீவிரவாதிகளின் உடல்களை போலீசார் வெளியே கொண்டு வந்தனர் என்றார் ராணுவசெய்தித் தொடர்பாளர்.
கடந்த 2 மாதங்களில், தீவிரவாதிகள் அடிக்கடி மசூதியில் பதுங்கிக் கொண்டு ராணுவ வீரர்களுடன் சண்டையில்ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில், இது 4வது சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications