மன நோயாளிகளுக்கு உதவ வராத பொதுமக்கள்
ஏர்வாடி:
ஏர்வாடியில் நடந்த தீ விபத்துக்கு சிம்னி விளக்கு கீழே விழுந்து தீப்பிடித்துக் கொண்டது தான் காரணம் என்று ராமநாதபுரம்மாவட்ட கலெக்டர் விஜயக்குமார் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா அருகே உள்ள மன நோயாளிகள் காப்பகத்தில் திங்கள்கிழமை அதிகாலை 5.30மணியளவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் காப்பகத்தில் இருந்த 25 மன நோயாளிகள் கருகி இறந்தனர்.
5 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் கீழக்கரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த காப்பகத்தில் மொத்தம் 45 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களில் 11 பேர் பெண்கள் என்பதுதான்பரிதாபம்.
இந்த தீவிபத்து குறித்து மாவட்ட கலெக்டர் விஜயக்குமார் கூறுகையில், காப்பகத்தில் ஏற்றப்பட்டிருந்த சிம்னி விளக்குகவிழ்ந்ததில் அங்கிருந்த மேற்கூரைகளில் தீப்பிடித்துக் கொண்டது. இதனால் காப்பகம் முழுவதும் தீ பரவியது.
மன நோயாளிகள் அனைவரும் சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்ததால் தப்ப முடியாமல் போய் விட்டது. இதன் காரணமாக 25பேர் பரிதாபமாக உருக்குலைந்து போய் இறந்தனர். இவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு விட்டன. ஆனால், யாருடையஅடையாளமும் தெரியவில்லை.
தீப்பிடித்துக் கொண்டதும் மன நோயாளிகள் கூக்குரலிட்டுள்ளனர். ஆனால் காப்பகத்தில் இருந்தவர்கள் மற்றும் பக்கத்தில் இருந்தபொதுமக்கள் யாரும் உதவிக்கு வரவில்லை. மன நோயாளிகள் அடிக்கடி கதறுவது சகஜம் என்பதால் அவர்கள் யாரும்கண்டுகொள்ளவில்லை.
ஆனால் பின்னர் தான் தீவிபத்து என்பது தெரிய வந்தது. ஆனால் அதற்குள் 25 பேர் கருகி விட்டனர். இந்த விபத்தைப்பயன்படுத்தி 4 மனநோயாளிகள் பேர் தப்பி ஓடி விட்டனர். அவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்மாவட்டக் கலெக்டர் விஜய்குமார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications