பஸ்சில் ஈவ்-டீசிங்... 3 பேர் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை பூந்தமல்லி பகுதியில் பஸ்சின் படிக்கட்டில் நின்று கொண்டு ஜன்னல் வழியாக பெண்களிடம் கிண்டல்,கேலி செய்த 3 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

பூந்தமல்லியைச் சேர்ந்தவர்கள் சங்கர், மாரியப்பன், முருகன். இந்த மூன்று பேரும் உயிர் நண்பர்கள். எங்குபோனாலும் சேர்ந்தே போவார்கள், வருவார்கள்.

மூன்று பேருக்கும் வயது 18. அதனால் அந்த வயதுக்குரிய சேட்டைகள் கொஞ்சம் அதிகமாகவே செய்வார்களாம்.

மூன்று பேரும் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு மாணவிகளைக் கேலி செய்வது வழக்கமாம். இவர்களதுஅட்டகாசம் எல்லை மீறியது.

பஸ்சின் படிக்கட்டில் நின்று கொண்டு ஜன்னல் வழியாக கை விட்டு மாணவிகளை, இளம் பெண்களை கிண்டல்செய்வது, சில்மிஷம் செய்வது என எல்லை கடந்து கொண்டிருந்தார்கள்.

இவர்கள் குறித்து போலீஸுக்குப் புகார் வரவே பூந்தமல்லி போலீஸார் சாதாரண உடையில் இவர்களைக்கண்காணித்தனர்.

வழக்கம் போல இவர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டபோது, அவர்களைப் போலீஸார் வளைத்துப்பிடித்து கைதுசெய்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற