• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

பச்சைக் குழந்தை கொலைகள்

By Staff
|

சென்னை:

தமிழகத்தில் கொல்லப்படும் பெண் குழந்தைகளில் 6ல் ஒரு குழந்தை பிறந்த உடனேயே கொல்லப்படுகிறது என்றுதெரியவந்துள்ளது.

பெண் குழந்தை பிறந்தால், அதை உடனே கொன்றுவிடுவது என்பது கடந்த 35 ஆண்டுகளாக தமிழகத்தில்குறிப்பாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடந்து வருகிறது.

இவையெல்லாம் "அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு" என்ற மூடமொழியைப் பின்பற்றும் படிப்பறிவில்லாதபெண்களால் செய்யப்படுகிறது.

வயது முதிர்ந்து குற்றுயிராய்க் கிடந்தாலும் "கருணைக் கொலை"க்கு அனுமதி இல்லை என்று உயிரின்மகத்துவத்தைப் பெரிதும் மதிக்கும் நாடு நம் நாடு.

இந்நிலையில், இவர்கள் எப்படி பிறந்த உடன் உயிரைப் பிதுக்கி எரியலாம்?

ஒரு குறுகிய வட்டத்திற்குள் சிக்கி, மண்டிக்கிடக்கும் கல்வி அறிவின்மையோடு, ஒண்டிக்கிடக்கும் கிணற்றுத்தவளைகள் தான் இந்தக் கொலையை நியாயப்படுத்துகிறார்கள்.

முன்பெல்லாம் மூதூர் மதுரையின் புறநகர்ப் பகுதி மக்கள்தான் இந்த மூடப்பழக்கத்தில் மூழ்கிக் கிடந்தார்கள்.இப்போது, சேலம், தர்மபுரி என்று பட்டியல் நீண்டுகொண்டிருக்கிறது.

பொருளாதாரத்தில் இழைத்தவர்கள் வரதட்சணை பயத்தால் பெண்சிசுக் கொலை செய்கின்றனர்.

பொருளாதாரத்தில் பெருத்தவர்கள் தங்கள் பணமும் வசதியும் மற்ற குடும்பத்துக்கு போய்விடக்கூடாது என்பதற்காகஇதில் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறு சமுதாயத்தின் அனைத்து நிலையிலும் இந்தக் கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது.ஒவ்வொருவரும் ஒரு துருப்பிடித்த காரணத்தை வைத்துக் கொண்டு இந்த துஷ்டகாரியத்தை ஜரூராக நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

இதுபற்றிய ஒரு கருத்தரங்கு திருச்சியில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் வெள்ளிக்கிழமை நடந்தது.அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாரதிதாசன் பல்கலைக்கழக பொறுப்பு துணைவேந்தர் டாக்டர் ஆத்ரேயாபேசினார்.

அவர் பேசுகையில், தமிழகத்தில் பெண் சிசுக் கொலைகள் நடப்பது புதிதல்ல. கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகஇது நடந்து வருகிறது. வெறும் பொருளாதார பிரச்சினை, சமூக பிரச்சினை போன்றவற்றால் இந்த பெண் சிசுக்கள்கொல்லப்படுவதில்லை.

அதையும் தாண்டி பெண்களிடையே மண்டிக் கிடக்கிற கல்வியறிவின்மைதான் இதற்கு முக்கியக் காரணம் என்றார்.

நேற்று சேலத்தில் 101 வது குழந்தை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் செய்தி ஒரு பக்கம்மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் (அந்தக் குழந்தை பிழைத்துக் கொண்டதால்) பெற்றோர் இருந்தும் அனாதையானஅந்தக் குழந்தையின் எதிர் கால மன நிலையை யோசித்துப் பார்ததால் நெஞ்சு கனக்கிறது.

தொட்டில் குழந்தைத் திட்டம் நல்ல திட்டம் தான். ஆனால், பிரச்சனைக்கு இது மருந்தல்ல. மருந்து பெண்கள்கல்வியில் இருக்கிறது. அதைச் செயல்படுத்துமா அரசு??

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X