சட்டசபை வளாகத்தில் திமுக - அதிமுக எம்.எல்.ஏக்கள் மோதல்
சென்னை:
சட்டசபை வளாகத்தில் திமுக - அதிமுக எம்.எல்.ஏக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
ஒவ்வோர் ஆண்டும் இந்த தினத்தின் போது தமிழக முதல்வர் தலைமையில்எம்.எல்.ஏக்கள் மத நல்லிணக்க உறுதி மொழி எடுத்துக் கொள்வது வழக்கம்.
இதன் படி இன்று (திங்கள்கிழமை) மத நல்லிணக்க உறுதி மொழி எடுத்துக்கொள்வதற்காக சட்டசபை நடவடிக்கைகள் 30 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டன.
எம்.எல்.ஏக்கள் அனைவரும் சட்டசபையைவிட்டு வெளியே வந்தனர். வளாகத்தில்கூடியிருந்தனர்.
தி.மு.க. உறுப்பினர் பரிதி இளம் வழுதி 2 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால்தி.மு.க உறுப்பினர்கள் கோபத்தில் இருந்தனர்.
இந்நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் லாபியில் கூடியதும், முன்னாள் அமைச்சரும்,அ.தி.மு.க. எம்.எல்.ஏவுமான பொள்ளாச்சி ஜெயராமன் தி.மு.க எம்.எல்.ஏக்களைபார்த்து உரத்த குரலில் ஏதோ கூறினார்.
அவர் தகாத வார்த்தையை உபயோகப்படுத்தியதாகக் கூறிய தி.மு.க. எம்.எல்.ஏக்களும்பதிலுக்கு குரல் கொடுத்தனர்.
இதையடுத்து இரண்டு கட்சி எம்.எல்.ஏக்களும் மாறி மாறி பெரும் குரலில்வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சட்டசபை லாபியில் கூச்சலும், குழப்பமும், பரபரப்பும்ஏற்பட்டது.
பின்னர் அமைச்சர்கள் வந்து சமாதானப்படுத்திய பின்னர் கலைந்து சென்றனர்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications