சசிகலா அண்ணன் இல்லத் திருமணத்தில் ஜெயலலிதா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுகவினர் பொய்வழக்கு, பழிவாங்குதல் போன்ற வார்த்தைகளை உச்சரிப்பதற்கே அறுகதை அற்றவர்கள் என்றுமுதல்வர் ஜெயலலிதா கூறினார்.

ஜெயலலிதாவும், சசிகலாவும் பிரிந்து விட்டார்கள், அவர்களுக்குள் இப்போது எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை.சுதாகரன் விவகாரத்தில் அவர்கள் 2 பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டது என்றெல்லாம் வந்தசெய்திகளைப் பொய்யாக்கி விட்டது சுந்தரவதனம் இல்லத் திருமணம்.

ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலாவின் அண்ணன் தான் இந்த சுந்தரவதனம்.

இவரது மகன் டாக்டர் வெங்கடேசுக்கும், பண்ணைவயல் பாஸ்கர் என்பவரின் மகள் ஹேமாவிற்கும் நேற்றுசென்னையில் காமராஜர் அரங்கத்தில் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு முதல்வர் ஜெயலலிதா தலைமை தாங்கினார். பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம் மற்றும் பகுஜன்சமாஜ் கட்சித் தலைவர் கன்ஷிராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருமணத்தை நடத்தி வைத்து ஜெயலலிதா பேசியதாவது,

ஆரம்ப காலத்திலிருந்தே எனக்கும் அதிமுவிற்கும் சோதனை வரும்போதெல்லாம் எனக்கு உறுதுணையாகஇருந்தவர் சகோதரி சசிகலா. மணமகளின் தந்தை பண்ணைவயல் பாஸ்கரன் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட ஜெ.பேரவைச் செயலாளராக இருந்து சிறப்புடன் பணியாற்றி வருபவர்.

இயக்கரீதியாக ஒன்றாக உள்ள குடும்பங்கள், திருமண உறவுகளாலும் ஒன்றாக இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது.

எனக்குத் துணையாக இருந்தார் என்ற ஒரே காரணத்திற்காக சசிகலா மீது பொய் வழக்குப் போட்டது அங்னறையதிமுக அரசு. அவரை விசாரிப்பதாக அழைத்துச் சென்று காலை முதல் இரவு 10 மணி வரை ஒரு அறையில்உட்காரவைத்து விட்டு பிறகு சிறையில் அடைத்தார்கள்.

சசிகலாவின் மூத்த சகோதரர்தான் சுந்தரவதனம். இவர் தனது தங்கை பசியால் துடிப்பாரே என்று டிபன்கேரியரோடு விசாரணை அறைக்கு வெளியில் காத்துக் கிடந்தார். சசிகலாவின் அண்ணன் என்ற ஒரேகாரணத்துக்காக சுந்தரவதனத்தையும் போலீசார் கைது செய்து கொடுமைப் படுத்தினார்கள்.

திமுகவினர் தான் இந்தக் கொடுமைகள் நடக்கத் துணையாக இருந்தவர்கள். அவர்கள்தான் பொய்வழக்குப்போட்டவர்கள், பழிவாங்கத் துடித்தவர்கள்.

இன்றைக்கு அவர்களே பொய்வழக்குப் போடுகிறோம் பழிவாங்குகிறோம் என்று நம்மைப் பார்த்துஓலமிடுகிறார்கள்.

திமுகவினர் எல்லாம் பொய்வழக்கு, பழிவாங்குதல் போன்ற சொற்களை உச்சரிக்கக் கூட அறுகதையற்றவர்கள்,யோக்கிதை இல்லாதவர்கள்.

இவ்வாறு முதல்வர் அந்த விழாவில் பேசினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற