சுப்பிரமணிய சுவாமியின் புதிய அவதாரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

நாட்டின் ஒற்றுமையையும், ஜனநாயகத்தையும் காப்பதற்காக கமிட்டி ஒன்றைஅமைக்க இருப்பதாக ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

ஆட்சியில் இருப்பவர்களுடன் மோதுவதில் வல்லவர் சுப்பிரமணியம் சுவாமி. தனதுஅரசியல், சட்ட, பொருளாதார அறிவைப் பயன்படுத்தி கேஸ் போட்டே கலகலக்கச்செய்வார்.

கொஞ்சகாலம் அமைதியாக இருந்த சுவாமி இப்போது மீண்டும் வெளிச்சத்துக்வந்திருக்கிறார். எங்கெல்லாம் சட்டம் மீறப்படுகிறதோ அதை எதிர்த்துப் போராட ஒருஅமைப்பைத் தொடங்கியுள்ளார்.

இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்கூறியதாவது:

நாட்டின் ஒற்றுமையையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்காக கமிட்டி ஒன்றைஅமைக்க திட்டமிட்டுள்ளேன். இந்த கமிட்டியை அமைப்பது குறித்து 12 முக்கியதலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளேன்.

திமுக தலைவர் கருணாநிதி கைதுசெய்யப்பட்ட முறை மிகவும் தவறானது. திமுகபேரணியின் போது திமுக தொண்டர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலும்கண்டிக்கத்தக்கது.

நான் அமைக்க உள்ள கமிட்டி செப்டம்பர் மாதம் மத்தியிலிருந்து தன் பணியைதொடங்கும்.

நாடு முழுவதும் சட்ட விதிகள் மீறப்படுவது குறித்து இந்த கமிட்டி கண்காணிக்கும்.முதலில் தனது பணியை தமிழகத்திலிருந்துதான் தொடங்கும்.

கருணாநிதியும், இரண்டு மத்திய அமைச்சர்களும் கைது செய்யப்பட்டது சட்டத்திற்குபுறம்பானது.

ஒருவரை கைது செய்ய வேண்டுமானால் எந்த விதமான முறைகள் பின்பற்ற வேண்டும்என்று சட்டக் கமிஷன் இந்திய அரசுக்கு கூறியுள்ள வரைமுறையை மீறி தமிழக அரசுநடந்து கொண்டுள்ளது.

புதிதாக தொடங்கவுள்ள கமிட்டி குறித்து கருணாநிதியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளேன். விரைவில் அவரை நேரில் சந்தித்தும் பேசவுள்ளேன்.

நாட்டின் அரசியல் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் ஜெயலலிதாவின் அரசுடிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும். ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அரசு பணிக்குஅழைத்துக் கொள்வது குறித்து, மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைஎடுக்கவில்லை என்றார் சுவாமி.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற