நியூயார்க்கில் முஷாரபை சந்திக்கிறார் வாஜ்பாய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐ.நா.சபைக் கூட்டத்தில், பாகிஸ்தான் அதிபர் முஷாரபை, பிரதமர் வாஜ்பாய்சந்தித்துப் பேச்சு நடத்த உள்ளார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறைச் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்கூறியிருப்பதாவது,

செப்டம்பர் மாதம் நியூயார்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் பிரதமர் வாஜ்பாய் பங்கேற்கிறார்.அப்பேது அவர் பாகிஸ்தான் அதிபர் முஷாரபை செப்டம்பர் 19ம் தேதி சந்தித்துப் பேச்சு நடத்துவார்.

இது குறித்து தனது விருப்பத்தை பாகிஸ்தான் தூதர் அஷ்ராப் ஜஹாங்கீர் குவாசி மூலமாக, இந்தியவெளியுறவுத்துறைச் செயலாளர் கோகிலா ஐயரிடம் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையில் 2 நாடுகளுக்கிடையில் உள்ள உறவை மேம்படுத்துவது குறித்தும், ஆக்ராபேச்சுவார்த்தையில் ஏற்பட்ட பின்னடைவைச் சரிசெய்வது குறித்தும் 2 தலைவர்களும் பேசுவார்கள்.

ஆக்ரா பேச்சுவார்த்தை ஒரு துவக்கமே தவிர, 2 நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறும்.இனி வரும் காலங்களில் 2 நாடுகளுக்கிடையில் உள்ள வேறுபாடுகள் கலையப்பட்டு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படஇந்தப் பேச்சுவார்த்தைகள் உதவும். இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பு கூறுகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் அதிபரும் இந்தப் பேச்சுவார்த்தை நடக்கவிருப்பது குறித்து உறுதி செய்துள்ளார். அவர்கூறியதாவது,

இந்திய பிரதமருடன் நியூயார்க்கில் 2 நாடுகளுக்கிடையில் உள்ள பிரச்சனைகள் குறித்துப் பேச உள்ளேன்.

மேலும் ஆக்ரா பேச்சுவார்த்தைக்குப் பிறகு 2 நாடுகளுக்கிடையில் உள்ள உறவு சற்று மேம்பட்டுள்ளது. ஆனால்காஷ்மீர் பிரச்சனையில் மட்டும் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்திய இராணுவம் இந்திய எல்லையில்யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்று அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இது சர்வதேச அளவில் சட்டவிரோதமான செயல். ஆனால் காஷ்மீர் மக்களின் சுய உரிமைக்கு பாகிஸ்தான் அரசுஅனைத்து வழிகளிலும் ஆதரவு அளிக்கும் என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற