ஈவ்-டீசிங் கொடுமையை தடுக்க கவுன்சிலிங்
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் தொடர்ந்து நடந்துவரும் ஈவ்-டீசிங் கொடுமைகளை தடுக்கபள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கவுன்சிலிங் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாககன்னியாகுமரி ஆட்சி தலைவர் ககன்தீப் சிங் கூறியுள்ளார்.
கன்னியாகுமரியில் தன்னை காதலிக்கவில்லை என்பதால் தன் காதலி மீதும் அவரதுசகோதரி மீதும் ஆசிட் ஊற்றி அவர்கள் முகத்தை சிதைத்த இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டடு குண்டர்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சில தினங்களுக்கு முன் இதே மாவட்டத்தில் அமுதா என்ற பெண் ஈவ்-டீசிங் காரணமாகதற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரியில் தொடர்ந்து வரும் ஈவ்-டீசிங்கிற்கு பல மகளிர் சங்கங்களும், சமூகநல அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இந்நிலையில் ஈவ்-டீசிங் கொடுமைகளை தடுப்பதற்காக கன்னியாகுமரியில் உள்ளபள்ளி மற்றும் கல்லூரிகளில் கவுன்சிலிங் முறை அறிமுகத்தப்படும் என்றுகன்னியாகுமரி மாவட்ட ஆட்சி தலைவர் ககன் தீப் சிங் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கன்னியாகுமரியில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம்கூறுகையில், ஈவ்-டீசிங் காரணமாக மாணவி அமுதா தற்கொலை செய்து கொண்டதுதொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈவ்-டீசிங் கொடுமைகளைத் தடுப்பது தொடர்பாக மகளிர் சங்கத்தினர் மற்றும் சமூகநல அமைப்புகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது பள்ளி,கல்லூரிகளில் கவுன்சிலிங் முறையை அறிமுகப்படுத்தப்படுவது என்று முடிவுசெய்யப்பட்டது.
கவுன்சிலிங் முறையை அறிமுகப்படுத்தவதன் மூலம் ஈவ்-டீசிங் கொடுமையை தடுக்கமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications