For Daily Alerts
338 ஆசிரியர்களுக்கு "நல்லாசிரியர் விருது"
சென்னை:
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, நாளை (புதன்கிழமை) 338 பள்ளி ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள்வழங்கப்பட உள்ளன.
இதையொட்டி, ஆண்டுதோறும் தமிழகம் முழுவதிலுமுள்ள பள்ளிகளிலிருந்து சிறந்த ஆசிரியர்கள்தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களுக்கு நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுஅளிக்கப்படும்.
அந்த வகையில், இந்த ஆண்டு 338 பேர் நல்லாசிரியர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கலைவாணர் அரங்கில் இவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். தமிழக கல்வி அமைச்சர் தம்பிதுரைஇவ்விருதுகளை வழங்கவுள்ளார்.
தமிழகத்தில் உள்ள தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து இந்த 338 ஆசிரியர்கள்,நல்லாசிரியர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!