காவிரி பிரச்சனை: நாளை அனைத்துக் கட்சி கூட்டம்
சென்னை:
காவிரி நீரைத் திறந்து விடுவதற்கு கர்நாடக அரசு மறுத்து விட்ட நிலையில், இப்பிரச்சனை பற்றி விவாதிப்பதற்காக,சென்னையில் நாளை (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது என்று தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் இன்று சட்டசபையில் தெரிவித்தார்.
நேற்று டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில், கர்நாடக அரசு உடனடியாககாவிரித் தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் வலியுறுத்தினர்.
ஆனால், கர்நாடகம் தண்ணீர் திறந்து விடுவதற்கு மறுத்து விட்டது. பருவமழை பொய்த்து விட்டதால், கர்நாடகஅணைகளில் ஏற்கனவே தண்ணீர் மிகவும் வற்றி விட்டது என்றும் கர்நாடக விவசாயிகளின் நிலையையும் யோசிக்கவேண்டும் என்றும் காரணங்கள் கூறி, கர்நாடகம் கைவிரித்து விட்டது.
இதையடுத்து, எந்த ஒரு நல்ல முடிவையும் எடுக்காமலேயே அக்கூட்டம் முடிந்துள்ளது.
தற்போது மேட்டூர் அணையில் இருக்கும் தண்ணீர் அடுத்த 9 நாட்களுக்கு மட்டும்தான் போதுமான அளவாகஉள்ளது. திறந்துவிட வேண்டிய 113.93 டி.எம்.சி. நீரில், 50.73 டி.எம்.சி. நீரை மட்டுமே கர்நாடக அரசு இதுவரைதிறந்துவிட்டுள்ளது. இதனால் குறுவைச் சாகுபடிக்காக, 3.9 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள்னைத்தும் கருகி விடப் போகிறது.
எனவே இப்பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக, நாளை சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்நடைபெறவுள்ளது என்றார் தளவாய் சுந்தரம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications