ஜெ. என்ன செய்யலாம்?
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் அவர்பதவியை ராஜினாமா செய்வதே பொருத்தமானதாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத்தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் கடுமையான கண்டனத்திற்கு ஆளாகியுள்ள ஜெயலலிதா, உடனடியாக முதல்வர்பதவியிலிருந்து விலகுவதே சரியானதாக இருக்கும் என்று சில அரசியல் தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் முக்கியக் கட்சியின் தலைவர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கருத்துக் கேட்டபோது,பெயர் வெளியிட வேண்டாம் என்று கூறி அவர் கூறியதாவது: ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றது தவறுஎன்று மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளது சுப்ரீம் கோர்ட். தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா முதல்வராகமுடியும் என்றால் பிறகு சட்டம் எதற்கு, நாளையே வேறு ஒருகொலைக் குற்றவாளியும் முதல்வராகி விட முடியுமே,மக்கள் தீர்ப்பு மட்டும் இருந்தால் போதாது, சட்டத்தையும் மதிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கடுமையாகக்கூறியுள்ளனர்.
இந்நிலையில், ஜெயலலிதா தனது பதவியை ராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை. அப்படிச்செய்யாமல் போனால், அவரது அரசை டிஸ்மிஸ் செய்யக் கூறி சுப்ரீம் கோர்ட் உத்தரவிடலாம். அப்படி நேர்ந்தால்அது தமிழகத்திற்குத்தான் அவமானமாக இருக்கும். அதுபோன்ற நிலை நேருவதற்கு முன் தனது பதவியைஜெயலலிதா ராஜினாமா செய்து இப்போதாவது ஜனநாயகத்தை மதிக்க வேண்டும் என்றார்.
இதேபோன்ற கருத்தையே மதிமுக தலைவர் வைகோவும் திருச்சியில் வியாழக்கிழமை நிருபர்களிடம்தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு விசாரணை குறித்து அதிமுக தரப்பில் இதுவரை யாரும்எந்தக் கருத்தையும் சொல்லவில்லை. பெருத்த மவுனம்தான் அங்கிருந்து வந்து கொண்டிருக்கிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications