சோனியா-வாஜ்பாய் அவசர சந்திப்பு
டெல்லி:
அமெரிக்கா, நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் மீது தீவிரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதல் குறித்தும்,அந்த விஷயத்தில் இந்தியா எடுத்துள்ள நிலை குறித்தும் பிரதமர் வாஜ்பாய், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தியுடன் விவாதித்தார்.
இந்தக் கூட்டத்தில், தற்போது அமெரிக்காவில் நிலவி வரும் டென்ஷனான சூழ்நிலையில் வாஜ்பாய் அமெரிக்காசெல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், பிரதமரின் அமெரிக்க பயணம்இப்போது சாத்தியமானது தானா என்பது குறித்து அதிகாரிகளுடன் விவாதித்தார். பிரதமரின் அமெரிக்கப் பயணம்சந்தேகம்தான் என்றாலும், இது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
தற்போதுள்ள சூழ்நிலையில் வாஜ்பாய் அங்கு சென்றால், அவருக்கு இந்திய அரசு கேட்டுக்கொள்ளும் அளவுக்குஅமெரிக்க அரசால் பாதுகாப்பு முடியுமா என்பது சந்தேகமாக இருப்பதால், வாஜ்பாயின் அமெரிக்க பயணம் ரத்துசெய்யப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இந்நிலையில் வியாழக்கிழமை மாலை அமெரிக்காவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளது குறித்தும், இந்தவிஷயத்தில் இந்தியாவின் நிலை குறித்தும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் வாஜ்பாய்பேச்சு நடத்தினார்.
பின்லேடன் மேலுள்ள கோபத்தால், எந்த நேரமும் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தலாம் என்றுகூறப்படுகிறது. அப்போது இந்தியா நடந்து கொள்ள வேண்டிய நிலை பற்றியும் இவர்கள் 2 பேரும் விவாதித்தனர்என்று கூறப்படுகிறது.
வாஜ்பாய்-சோனியா பேச்சு சுமார் 45 நிமிடங்களுக்கு நீடித்தது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications