For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங்.-தமாகா இணைப்பு இப்போதைக்கு இல்லை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

காங்கிரஸ் கட்சியுடன் இப்போதைக்கு இணைவது இல்லை என்ற முடிவில் தமிழ் மாநிலகாங்கிரஸின் புதிய தலைவர் கோவிந்தவாசன் தீர்க்கமாக இருப்பதாக கூறப்படுகிறது.

அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்துக் கொண்டதற்காக காங்கிரஸ் கட்சியிலிருந்துபிரிந்த மூப்பனார், தமிழ் மாநில காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் துவக்கினார்.ஆனால் காலத்தின் கோலமாக அதே அ.தி.மு.கவுடன் கடந்த சட்டசபைத் தேர்லில்கூட்டணி வைத்துக் கொண்டு தேர்தலைச் சந்தித்தது த.மா.கா.

அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்துக் கொள்வதற்கு முன்பே, காங்கிரஸ் கட்சியுடன்த.மா.கா.விரைவில் இணையும் என்ற பேச்சு எழுந்தது. இதை உறுதிப்படுத்துவது போலத.மா.கா.தலைவர் மூப்பனார் மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் செயல்பாடுகள்இருந்தன.

மூப்பனாரை கேட்காமல், காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் எதையுமேசெய்வதில்லை. தேர்தல் தொகுதி ஒதுக்கீட்டின்போது கூட காங்கிரஸுக்கும் சேர்த்துமூப்பனாரே ஜெயலலிதாவுடன் பேசினார்.

இந்த நிலையில் மூப்பனாரின் காங்கிரஸுடன் இணைவது என்ற முடிவில் தயக்கம்ஏற்பட்டது. சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 7 இடங்களில் மட்டுமேவென்றது. ஆனால் த.மா.கா. 20க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றது.

வெறும் 7 இடங்களில் வெற்றி பெற்ற கட்சியுடன் போய் நாம் இணைவதா, தனித்தேஇருப்போம் என்ற முடிவுக்கு மூப்பனார் அப்போது வந்தார். இந்த நிலையில்துரதிர்ஷ்டவசமாக மூப்பனார் மரணமடைந்தார்.

அவரது மறைவுக்குப் பிறகு தலைவர் இல்லாமல் த.மா.கா. தடுமாறியது. இந்தநிலையில் மூப்பனாரின் மகன் கோவிந்தவாசனுக்கு பட்டம் சூட்டப்பட்டது. இந்தநிலையில் த.மா.காவுக்கு அதிர்ச்சி தரும் வகையில், காங்கிரஸ் அறக்கட்டளைக்கு புதியநிர்வாகிகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நியமித்தார்.

அதில் ஜெயந்தி நடராஜன் மட்டுமே த.மா.காவைச் சேர்ந்தவர். மற்றவர்கள்அனைவரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

காங்கிரஸ் அறக்கட்டளையின் கீழ்தான் காமராஜர்பவன், காமராஜர் அரங்கம்,சத்தியமூர்த்தி பவன், தேனாம்பேட்டைகாங்கிரஸ் மைதானம் ஆகியவை வருகின்றன.இந்த சொத்துக்கள் அனைத்தும் தற்போது த.மா.கா. வசம் உள்ளன.

புதிய நிர்வாகிகள் அனைவரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருப்பதால்இவை அனைத்தும் மீண்டும் காங்கிரஸ் வசம் சென்று விடும் என்ற அச்சம் த.மா.கா.தலைவர்களிடையே ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் இப்போதைக்கு இணைவதில்லை என்றுகோவிந்தவாசன் முடிவெடுத்திருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள்தெரிவிக்கின்றன. இன்னும் சில நாட்களில் கோவிந்தவாசன் சத்தியமூர்த்தி பவனுக்குவந்து கட்சிப் பணிகளைக் கவனிக்க திட்டமிட்டுள்ளார்.

அதற்கு முன்பாக மூப்பனார் காலத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட நிர்வாகிகள் மீண்டும்அதே பொறுப்புகளில் தொடர்வார்கள் என்று அறிவித்துள்ளார். புதிய நிர்வாகிகளைநியமித்தால் கோஷ்டிப் பூசல் ஏற்பட்டு தேவையில்லாத குழப்பம் ஏற்படும் என்பதால்இப்போதைக்கு அவர்களே நீடிக்கட்டும் என்ற முடிவிற்கு கோவிந்தவாசன்வந்துள்ளதாகத் தெரிகிறது.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சத்தியமூர்த்தி பவனை,த.மா.காவின் தலைமை அலுவலகம் என்று உறுதியாக குறிப்பிட்டுள்ளது த.மா.கா.வட்டாரத்தில் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், காங்கிரஸ்வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சோனியாவின் செயல் கோவிந்தவாசனை அப்செட் செய்துள்ளதாகவும், தந்தை இறந்தசில நாட்களிலேயே இப்படி அவர் செய்திருப்பது, மூப்பனாரையும், அவரதுகட்சியையும் அவமானப்படுத்தும் செயல் என்று கோவிந்தவாசன் நினைப்பதாகத.மா.கா. வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

இப்போது காங்கிரஸ் கட்சியில் போய்ச் சேர்ந்தால், சோனியாவின் நடவடிக்கைக்குப்பயந்தே தாம் காங்கிரஸில் சேர்ந்து விட்டதாக பேச்சு வரும் என்று யோசிக்கிறார்.

கோவிந்தவாசன். எனவே முதலில் த.மா.காவை வலுவான கட்சியாக மாற்றுவது,உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெறுவது, காங்கிரஸ் கட்சியைவிட செல்வாக்கு மிக்க கட்சியாக மாறுவது ஆகியவற்றை தனது முதல் மற்றும் முக்கியலட்சியமாக்கிக் கொண்டுள்ளார் வாசன் என்று கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

கட்சியை வலுவாக்கும் விதத்தில் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களில் ஒருசிலரைமீண்டும் கட்சியில் சேர்க்க வாசன் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அதில் முதல்பெயராக ப.சிதம்பரத்தின் பெயர் உள்ளதாம்.

மூப்பனாருக்கு வலதுகரமாக சிதம்பரம் செயல்பட்டபோது, மூப்பனாரின் முடிவுகள்அனைத்தும் தெளிவாகவும், சரியாகவும் இருந்ததாக வாசன் கருதுகிறார். சிதம்பரம்பிரிந்து சென்ற பின் த.மா.கா. திசை மாறிச் சென்ற படகாக மாறி விட்டதாக அவர்கருதுகிறார்.

எனவே சிதம்பரம் மீண்டும் கட்சியில் சேர்ந்தால் அது கட்சிக்கு நல்லது என்று அவர்நினைக்கிறார். சிதம்பரத்தை அவர் மீண்டும் சேர்க்க நினைப்பதற்குக் காரணம்,கட்சிக்குள் நிலவும் கோஷ்டிப் பூசலை ஒழிக்க சிதம்பரம் போன்ற உறுதியான ஒருவர்இருந்தால் எளிதாக கோஷ்டிப் பூசலை சமாளிக்க முடியும் என்று அவர் நினைக்கிறாராம்.

எனவே, காங்கிரஸுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை என்ற அளவில் இப்போதுத.மா.கா. உள்ளது. அடுத்த கட்டமாக, சத்தியமூர்த்தி பவன் உள்ளிட்ட சொத்துக்களைஅபகரிக்க காங்கிரஸ் முயன்றால் அதை எப்படிச் சமாளிப்பது என்ற யோசனையில்வாசன் ஆழ்ந்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X