தலிபனுடன் உறவில்லை: சீனா
பீஜிங்:
சீனாவிற்கும், ஆப்கானின் ஆளும் அரசான தலிபனுக்கும் இடையே தொழில்நுட்ப மற்றும் வர்த்தக உறவுகள்உள்ளதாக அமெரிக்க பத்திரிக்கைகளில் வெளியான செய்திகள் தவறானவை என்று சீனாவின் வெளியுறவுத்துறைசெய்தித் தொடர்பாளர் ஜு பாங்ஷாவோ கூறியுள்ளார்.
இது குறித்து அவர் சீன அரசின் ஜின்ஹுவா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
அமெரிக்க பத்திரிக்கைகளான வாஷிங்டன் போஸ்ட் மற்றும் வால் ஸ்டிரீட் ஜர்னல் ஆகிய பத்திரிக்கைளில்சீனாவுக்கும் தலிபனுக்கும் தொழில் நுட்ப மற்றும் வர்த்தக உறவுகள் உள்ளதாகவும, சீனா தொடர்ந்துபிரதிதிநிதிகளை தலிபனுக்கு அனுப்பி தலிபனில் பாலம் கட்டுவதுபோன்றவற்றிற்கு ஆலோசனை வழங்குவதாகவுமகூறப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானது.
சீன நிறுவனமான ஹுவாய் டெக்னானஜீஸ் நிறுவனம் தலிபனில் தொலைத் தகவல் தொடர்புக்கு உதவிவருவதாகவும் வந்துள்ள தகவல்களும் தவறானவை.
பாகிஸ்தானிலிருந்து வரும் பத்திரிக்கை ஒன்றிலும் சீனா தலிபனுக்கு பொருளாதார மற்றும் தொழில் நுட்ப உதவிவழங்குவது தொடர்பாக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது என்று வந்த செய்திகளும் தவறானவை.
தலிபனுக்கும், சீனாவுக்கும் இடையே உறவுகள் உள்ளது என்ற தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை.
1993ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆப்கானில் உள்நாட்டு போர் ஏற்பட்ட பின்பு பாதுகாப்பு காரணமாக அங்கிருந்தஆப்கான் தூதரகம் மூடப்பட்டு விட்டது.
பிரதிநிதிகளை தலிபனுக்கு சீனா அனுப்பி வருவதாக வரும் தகவல்கள் ஆதாரமற்றவை என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications