பின் லேடனை பாதுகாப்போம்: தலிபான் உறுதி
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
ஒசமா பின் லேடனுக்கு பாதுகாப்பு அளிப்பது என்ற கொள்கையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்றுஆப்கானின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாகில் அஹ்மத் முடாவாகெல் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பாகிஸ்தான் தலைநகரான இஸ்லமாபாத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போதுகூறியதாவது:
ஒசாமா பின் லேடனை பாதுகாப்பது என்ற ஆப்கான் அரசின் கொள்கையில் எந்த விதமான மாற்றமும் கிடையாது.
எங்கள் நாட்டையும், எங்கள் நாட்டில் வாழும் மக்களையும் காப்பாற்ற எங்கள் பலம் முழுவதையும்பயன்படுத்துவோம். எங்கள் நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்ற வேண்டியது எங்ள் கடமை என்றார்
அமெரிக்கா ஆப்கான் மீது தாக்குதல் நடத்தினால் அதற்கு உதவும் நாடுகளை தலிபான் எதிரியாகத்தான்பாவிக்கும். அமெரிக்காவின் தரை வழி தாக்குதலுக்கும், வான் வழித்தாக்குதலுக்கும் உதவும் நாடுகள் மீது தலிபான்தாக்குதல் நடத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.












Click it and Unblock the Notifications