ஜெயலலிதா - ஜி.கே. வாசன் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று (சனிக்கிழமை) தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவரதுஇல்லத்தில் சந்தித்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த ஜி.கே. மூப்பனார் மரணமடைந்த பின் அவரது மகன் ஜி.கே. வாசன் அக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜி.கே. வாசன் சனிக்கிழமை தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவர் இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 1மணி நேரம் நீடித்ததது.
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று அ.தி.மு.க. தலைமை அலுவலகம் தெரிவித்தது. இருப்பினும்வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்து இரு தலைவர்களும் பேசியதாக கூறப்படுகிறது.
ஜி.கே. வாசன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்ற பின் அவர் தமிழக முதல்வரை முதன்முதலாக சந்தித்து பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications