இந்தியா-அமெரிக்கா விமான சேவை: யுனைட்டட் ஏர்லைன்ஸ் ரத்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்தியா-அமெரிக்கா இடையிலான விமான சேவையை நிறுத்துவதாக யுனைட்டட் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான இரு விமானங்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு தான் உலக வர்த்தகமையத்தில் ஒன்றும் பென்சில்வேனியாவில் ஒன்றுமாக மோதப்பட்டன.

இதையடுத்து தனது விமான சேவையை சர்வதேச அளவில் 20 சதவீத அளவுக்கு ரத்து செய்வதாக இந் நிறுவனம்அறிவித்தது. இதன் ஒரு கட்டமாக இந்தியாவுக்கான விமான சேவையை இந்த நிறுவனம் ரத்து செய்வதாகஅறிவித்துள்ளது.

எப்போது மீண்டும் விமான சேவை தொடங்கப்படும் என்பது குறித்து ஏதும் அறிவிக்கப்படவில்லை.

முன்னதாக இந்தியா-அமெரிக்கா இடையே நிறுத்தமே இல்லாத டைரக்ட் பிளைட் விடப்படும் என இந் நிறுவனம்அறிவித்திருந்தது. ஆனால், தீவிரவாதிகள் தாக்குதலால் 2 விமானங்களை இழந்து நிற்கும் இந் நிறுவனம் பலநாடுகளில் தனது சேவையை நிறுத்த ஆரம்பித்துவிட்டது.

இந் நிறுவனத்தின் விமானங்களில் பறக்க டிக்கெட் வாங்கியவர்களுக்கு பிற விமானங்களில் இடம் வாங்கித்தரப்படும் எனவும் அறிவித்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற